நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது, இம்மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசும், வருவாய் அலுவலர்கள் மூலம் போதிய முன்னேற்பாடுகளை செய்திருக்கின்றனர். இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சியில் நிவாரன முகாம்கள் அமைக்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதனை அறிந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொருலாளர் ஷாஜகான் தலைமையில் முஸ்லீம் லீக்கின் முக்கிய நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர்.
முன்னதாக நகர இளைஞர் அணியின் பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்வில் நகர முஸ்லீம் லீக்கின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Your reaction