ஜித்தா அய்டாவின் நவம்பர் மாத கூட்டம் 13/11/2020 அன்று மாலை நடந்த ஜாமிய பூங்கா பகுதியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
கிராத் : சகோதரர் ஷாகுல் அவர்கள்
தொடர்ச்சியாக அன்மையில் நமதூரைச்சார்ந்த வபாத் ஆனவர்களுக்காக துஆ செய்யப்பட்டது
முக்கிய நிகழ்வாக :
ஜித்தாவில் கொரோனா வைரஸ்களின் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட நமதூர்வாசிகளுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்பேசக்கூடிய மற்றும் அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவை செய்த நமதூரைச்சேர்ந்த டாக்டர் அஜ்மல் அவர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி ஜித்தா அய்டா சார்பில் சேவை ஊக்குவிப்பு விருதை அய்டாவின் முன்னால் இந்நாள் நிர்வாகிகள் மற்றும் நமதூர்வாசிகளின் முன்னிலையில் விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
மேலும் டாக்டர் அஜ்மல் அவர்களிடம் மருத்துவ கலந்தாய்வும் நடைபெற்றது இதில் மருத்துவம் சம்பந்தமான நமதூர்வாசிகளின் பல கேள்விகளுக்கு டாக்டர் அஜ்மல் அவர்கள் பதிலளித்தார்கள்.
மேலும் கொரோனா கோரப்பிடியின் உச்ச கட்ட காலத்தில் பல நபர்களுக்கு மருத்துவம் செய்த டாக்டர் அவர்களுக்கு அய்டாவின் சார்பாக வாழ்த்துக்களும் துஆவும் செய்யப்பட்டது.
இறுதியில் கஃபரா துஆவுடன் நவம்பர் மாத அமர்வு நிறைவுபெற்றது



Your reaction