தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.
அதிரையில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்யத் துவங்கிய கன மழை, மதியம் வரையிலும் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இதனால் அதிரையர்கள் வீடுகளில் முடங்கினர். எப்பொழுதும் காலை நேரங்களில் பரப்பரப்பாக காணப்படும் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.








Your reaction