எதற்காக இந்த ஓட்டம் ???

2406 0


Image result for running

 

 

 

 

Running

எல்லோரும் அதி வேகமாக
ஓடுகிறார்கள்.

நவீனம் நடத்தும் பொருளாதார
பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக
இருந்த சொந்த ஊர்களை உதறி தள்ளிவிட்டு
வேகமாக ஓடினார்கள்….

பந்தயம் கடினமாக இருந்தபோது
வேகத்தை மேலும் கூட்ட
தாய் மொழி தடையாக இருக்கவே
அதையும் ஒதுக்கி வைத்து
ஓடினார்கள்.

பின்னர்
தர்ம சிந்தனைகள், கடமை, கண்ணியம் கூட
சுமைகளாயிப்போயின….
எனவே அவை அனைத்தையும் உதறித்
தள்ளிவிட்டு ஓட்டத்தை தொடர்ந்தனர்..

உறவுகள் சுமையாக, தொந்தரவாக
அவர்களுக்கு தோன்றின..
அவற்றையும் விட்டுத் தள்ளினார்கள் அல்லது
விலகி ஓடினார்கள்.

இந்த நவீன மனிதர்களுக்குப்
பொருளாதார வசதி புகழ் —
வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத
வெறி மட்டுமே எஞ்சி உள்ளதால்
பந்தயத்தில் வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இனி அவர்கள் வீசி எறிய வேறு
எதுவும் இல்லை..!

படித்ததில் பிடித்தது.
நன்றி.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: