கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கன்னு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 72.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இருந்தும் அவரது உடல்நிலை மோசமடைந்துகொண்டே சென்றது. அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு 90% சதவீத நுரையீரல் பாதிப்பால் எக்மோ மற்றும் வேண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அமைச்சர் துரைக்கண்ணு, இரவு நேற்று இரவு 11.15 மணியளவில் காலமானதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் 1948ம் ஆண்டு பிறந்தவர். 2006, 2011, 2016 என மூன்று முறை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வால் வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Your reaction