சமூகத்தின் அவலம்!!!

2475 0


ஒற்றுமையே சமூகத்தின் வல்லமை என்பதை முஸ்லிம் சமூகம் ஏனோ அறியவில்லை

அதனால் தான் எதிரிகளை கண்டு விரண்டோடுவதை போல ஒவ்வொரு சாராரும் அவர் சாராத அமைப்புகளை கொள்கைவாதிகளை விரோதிகளாக பார்க்கும் அவல நிலை இன்றும் தொடர் கதையாகி வருகின்றது

தன்னை முஸ்லிம் என்று பெருமை பட பேசுபவர்களை கூட நீ காஃபிர் என்று வசை பாடும் இழிநிலை இன்று தொடர்கின்றது

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நேரடியாக எதிர்க்கும் காஃபிர்களின் மீது காட்டும் கடுமையை கூட முஸ்லிம்கள் மீது காட்டும் மனப்பாங்கு விஷ செடியாய் இன்று முளைத்து வருகிறது

அறிவும் சிந்தனையும் நபருக்கு நபர் வேறு பட்டு இருக்கும் வரை கருத்து வேறுபாடுகள் தொடரவே செய்யும் என்ற சாதாரண மனித இயல்பை கூட புரியாதவர்களாக முஸ்லிம்கள் இருப்பதை மறுக்க முடியவில்லை

சத்தியத்தை சொல்வது மட்டும் தான் நம் கடமை அதை திணிப்பதோ அல்லது அதை ஏற்காதவர்களை வஞ்சனையோடு பார்ப்பதோ இஸ்லாம் கண்டிக்கும் காரியம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்

கொள்கை எதிரிகளாக பிறர்கள் இருந்தாலும் நாம் கொள்கை மாறாது சமூக பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற சீரிய செயல் பாடு நம்மிடம் ஏற்பட முயற்சிக்க வேண்டும்

எதிரிகளை கூட அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம் என்று வாய் அளவு பிரச்சாரம் செய்வதை விட அதை செயல் அளவில் வடிவம் தர ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்

முஸ்லிம் அல்லாதவர்களுக்கே முகமன் எனும் சலாம் கூறுவது குற்றம் இல்லை என்று சட்டம் பேசும் நாம் முஸ்லிம்களில் கூட தரம் பார்த்து இயக்கம் பார்த்து முகம் பார்த்து சலாம் கூறும் இழிவான குணத்தை மாற்றிட முன் வர வேண்டும்

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ اَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ ﷺ: اَيُّ اْلاِسْلاَمِ خَيْرٌ؟ فَقَالَ: تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلي مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ

இஸ்லாத்தில் மிகச் சிறந்த செயல் எது?” என ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்டார், உணவு அளித்தல், அறிந்தவர், அறியாதவர் (அனைவருக்கும்) ஸலாம் சொல்லுதல்” என நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள் என ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் புகாரி

عَنِ ابْنِ مَسْعُوْدٍ ؓ قَاَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ مِنْ اَشْرَاطِ السَّاعَةِ اَنْ يُسَلِّمَ الرَّجُلُ عَلَي الرَّجُلِ لاَ يُسَلِّمُ عَلَيْهِ اِلاَّ لِلْمَعْرِفَةِ

(முஸ்லிம் என்ற காரணம் அல்லாமல்) அறிமுகத்தின் காரணமாக (அறிமுகமானவருக்கு) மட்டும் ஸலாம் சொல்வது கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்று” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் முஸ்னத்

நட்புடன் J. இம்தாதி

 

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: