மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு !

562 0


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் ‘கிடுகிடுவென’ உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 64. மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணைப் பகுதியில் 17 மில்லி மீட்டரும் பதிவாகி உள்ளது. இதே போல தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது.

புலியருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் படிகளிலும் தண்ணீர் ஓடுகிறது. ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது. இதே போல் 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை இந்த வருடத்தில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணைக்கு 130 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து உபரி நீர் தற்போது வெளியேற்றப்படுகிறது.

கருப்பாநதி அணையில் 69 அடியும், ராமநதி, கடனா அணையில் 80 கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: