தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக வணிகர்கள் அச்சப்படுகின்றனர்.
மல்லிப்பட்டிணம் ஈசிஆர் கால்வாயில் மழைநீர் வடிகால்களில் அடைப்புகள் இருப்பதால் மழைநீர் செல்லாமல் சாலையிலும், கடைகளிலும் குளம்போல் தேங்கி இருக்கிறது.கடந்த இரண்டு நாளைக்கு முன் பெய்த மழைநீர் தேங்கி இருப்பதன் காரணமாக கொசுகள் உற்பத்தி ஆகிறது, இதனால் நோய் பரவக்கூடும் அபாயம் இருப்பதாகவும்,
மேலும் இந்த வாய்க்கால் அருகே உணவகமும் செயல்படுகிறது,அங்கு சாப்பிட வருபவர்களுக்கும் நோய் தொற்று சூழல் இருக்கிறது.ஆகவே உடனடியாக ஈசிஆர் சாலையோரத்தில் இருக்கும் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றிட வேண்டும் என சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்றத்திற்கு வணிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Your reaction