அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ள அபாயங்களை தவிர்க்க,மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வசிப்பிடங்களில் புகாமல் இருக்க பயன்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் மூட்டைகளை பேரூராட அடுக்கி வைக்குமாறு தஞ்சாவூர் மண்டல பேரூராட்சி இயக்குனர் இளங்கோவன் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று பேரூராட்சி அலுவலகத்திற்கு அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் உதவியாளர் ரவிசங்கர் அவர்களுடைய மேற்பார்வையில் மண் மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டது.
Your reaction