தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாதின் 90 ஆவது இரத்த தான முகாம் ஆகஸ்ட் 22 இன்று மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மல்லிப்பட்டினம் கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை (RMH) இணைந்து இரத்த தானம் முகாம் இன்று நடைபெற்றது. இதில் 50 யூனிட் இரத்தம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு (RMH) வழங்கப்பட்டது.
இந்த இரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளராக சேதுபாவசத்திரம் காவல் ஆய்வாளர் V.R. அண்ணாதுரை (MA) அவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த இரத்ததான முகாமிற்கு மாவட்ட தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார் மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் வல்லம் ஜாபர் மாவட்ட துணை செயலாளர் பாவா மல்லிப்பட்டினம் கிளை நிர்வாகிகள் தலைவர் ஷேக் அப்துல்லாஹ் செயலாளர் ஜமால் மொய்தீன் பொருளாளர் கமால் மொய்தீன் துணை தலைவர் அப்துல்லாஹ் துணை செயலாளர் சையத் இப்ராஹிம் மற்றும் மாணவரணி லுஹா தொண்டரணி ரஹீம் ஹாரூன் அப்துல் மஜீத் முஹம்மத் இபாதுர் ரஹ்மான் ஜிஹானுதீன் ஜவாஹிர் ஷாஜஹான் ரத்வான் ஹாலித் நிஜாம் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியை மல்லிப்பட்டினம் கிளை மருத்துவரணி தமீம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Your reaction