தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் சார்பாக புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் A. கமால் பாட்சா தலைமை வகித்தார். வட்டார தலைவர் ஷேக் இபுராகிம் ஷா கமிட்டியின் தலைவர் KMM. அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் இரண்டாம் புலிக்காடு ராமகிருஷ்ணன்,பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தொகுதி செயலாளர் A. நூருல் அமீன், கமிட்டி செயலாளர் முகமது காசிம்,சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் நாகூர் கனி, காதர் சாஹிப் அப்துல் சுகுது அப்துல் அஜீஸ், கே.வடுகநாதன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.