மழை காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் தரை இறங்க தடை விதிக்கப்படுவதாக விமான இயக்குநரகம் அறிவித்துள்ளது.
துபாயில் இருந்து கடந்த 7-ந் தேதி கோழிக்கோடு வந்த விமானம் மிகப் பெரிய விபத்துக்குள்ளானது. கொட்டும் மழையில் விமானம் தரை இறங்கிய போது விபத்தில் சிக்கி இரண்டாக பிளந்தது.
இந்த கோர விபத்தில் மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே கோழிக்கோடு விமான நிலையம் போன்ற மங்களூரு விமான நிலையத்திலும் விபத்து நடந்தது. ஆனால் விபத்துகளில் இருந்து ஏன் பாடம் கற்கவில்லை என்கிற விமர்சனம் எழும்பியது.
இந்த நிலையில்தான், மழைகாலங்களில் இனி கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் இறங்குவதற்கு தடை விதிக்கப்படும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்திருக்கிறது.
Your reaction