Thursday, March 28, 2024

போலி ஆன்மீகத்தை எதிர்ப்பீர் மெய்யான ஆன்மீகத்தை அனைப்பீர்!!

Share post:

Date:

- Advertisement -

CCTV கேமராக்களுக்கு அஞ்சி தவறை செய்யாமல் இருக்கும் மனிதன் அந்த உளவு கேமராவை கண்டு பிடிக்கும் அளவு மனிதனுக்கு அற்புதமான மூளையை வழங்கிய இறைவனின் கண்காணிப்பை பற்றி பயப்படுவதும் இல்லை இறைவனை பற்றி சிந்திப்பதும் இல்லை

காரணம் கேமராக்களை மனிதன் தனது கண்ணால் பார்க்கின்றான் அதனால் அஞ்சுகின்றான் ஆனால் இறைவனை மனிதன் தனது இரு கண்களால் பார்க்கவில்லை எனவே இறைவனுக்கு அஞ்சவில்லை என்பது தான் உண்மை

கண்களை கொண்டு பார்ப்பதால் தான் ஒன்றை உண்மை என்று நம்ப வேண்டும் என்று சொன்னால் அதற்க்கு பெயர் பகுத்தறிவு அல்ல காரணம் மனிதனை போல் பகுத்தறிவை பெறாத ஆடு மாடு நாய் பன்றிகள் கூட கண்ணால் ஒன்றை காணும் போது அதை நம்பவே செய்யும்

அப்படியானால் சிந்தனையில் மனிதனும் மிருகங்களும் ஒரே தகுதியை பெற்றுள்ள இனங்களா ?

காற்றை கண்களால் மனிதன் பார்க்கவில்லை ஆனால் காற்று இருப்பதை அறிவை கொண்டு உணராமல் தனது நுகரும் அறிவை கொண்டு உண்மை என்று நம்புகிறான்

மனிதனின் உடலில் உள்ள உயிரை கூட மனிதன் கண்களால் பார்க்கவில்லை ஆனால் உயிர் என்ற ஒன்று உள்ளது என்பதை அதன் புற செயல்களால் புரிந்து கொள்கிறான்

சுருக்கமாக சொன்னால் ஒன்றை உண்மை என்று நம்புவதற்க்கு மனிதனுக்கு ஐம்புலன்கள் இருப்பதை போலவே ஒன்றை உண்மை என்று நம்புவதற்க்கு மனிதனுக்கு ஆறாம் அறிவான சிந்திக்கும் ஞானத்தையும் பெற்றுள்ளான்

கண்களால் பார்க்காவிட்டாலும் நுகர்வால் புரியாவிட்டாலும் தொட்டறிவால் அறியாவிட்டாலும் நாவால் ருசிக்காவிட்டாலும் மனிதனின் பகுத்தறிவு ஒன்றை சரி கண்டால் அதுவும் உண்மை என்பதே எதார்த்தமாகும்

மனிதனின் வாழ்கையில் ஆயிரக்கணக்கான விசயங்கள் ஐம்புலன்களால் அறியா விட்டாலும் பகுத்தறிவை கொண்டு தான் அவை உண்மை என்று நம்பப்படுகின்றது

இறைவன் எனும் நம்பிக்கையை பொறுத்தவரை அது பகுத்தறிவை கொண்டு தான் உண்மை என்பதை உணர முடியும்

காரணம் இறைவன் என்பவன் மனிதனின் கண்களில் தென்படாதவன் மறைவானவன் சர்வ ஆற்றலும் நிறைந்தவன்

இருக்கும் ஒன்றை அல்லது மனிதனின் கண்களை விட்டும் மறைந்திருக்கும் ஒன்றை தான் மனிதன் கண்டு பிடிக்க முடியுமே தவிர அறவே இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கவோ அல்லது இருக்கும் ஒன்றை இந்த பிரபஞ்சத்தில் இருந்து ஒரு பொருளாகவும் இல்லாது ஆக்கிவிட முடியாது

கண்டு பிடித்தல் என்ற வார்த்தையே மறைந்திருக்கும் ஒன்றை வெளியே கொண்டு வருவது தானே தவிர இல்லாத ஒன்றை உருவாக்க முடியும் என்பது பொருள் அல்ல

இந்த வேறுபாட்டை அறிவு ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் புரியாத காரணத்தால் தான் மனிதன் நாத்தீகனாக மாறுகிறான் அல்லது நாத்தீகவாதிகளின் வார்த்தை ஜாலங்களால் நாத்தீகனாக மாற்றப்படுகின்றான்

ஐம்பது வயதை எட்டிய ஒரு மனிதனிடம் ஐம்பத்து இரண்டு வருடங்களுக்கு முன்னால் நீ எங்கு இருந்தாய் என்று கேட்கும் போது அதற்க்கே பதில் சொல்ல தெரியாத மனிதன் இறைவன் எங்கே உள்ளான் என்று கேட்பது மட்டும் பகுத்தறிவாக தோணுகிறது போலும்

ஒரு பொருள் இருந்தாலே அதை உருவாக்கியவன் இருப்பான் என்று அறிவதற்க்கு பல்கலைகழகத்தில் படிக்க வேண்டிய அவசியம் இல்லை

நீங்கள் வைத்திருக்கும் மொபைலை உருவாக்கிய கம்பனி பெயரை தான் நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்களே தவிர அந்த மொபைலை நேரடியாக தயாரித்த மனிதனை பார்த்திருக்க மாட்டீர்கள் அதை தயாரித்தவன் பெயர் என்ன அவன் யார் என்றும் கூட அறிந்திருக்க மாட்டீர்கள் மொபைலை நேரடியாக தயாரித்தவனை நேரடியாக நாம் பார்க்கவில்லை என்பதற்காக மொபைல் தானாக தோன்றியது என்றோ அல்லது பரிணாமத்தால் தோன்றியது என்றோ அல்லது அது இயற்கையாக தானாக தோன்றியது என்றோ நாம் விவாதிக்க மாட்டோம் அவ்வாறு வாதித்தால் அவன் மூடனாகவே இருப்பான் இது தான் எதார்த்தம்

அர்ப்பமான மொபைலை உருவாவதற்கே ஒரு மனிதனின் பின்னனி உள்ளது என்று சொன்னால் அதிசயத்திலும் அதிசயமான நாம் வாழும் பூமி இதர பல்லாயிரக்கணக்கான கோள்கள் வானம் இன்னும் இது போல் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான விசயங்கள் அதை சார்ந்த பொருள்கள் நூற்றுக்கணக்கான உயிர்கள் ஜீவராசிகள் மனிதனுக்கு தேவையான அனைத்து தேவைகள் யாவும் தானாக தோன்றி இருக்குமா ?

உங்களுக்கு இறைவனை பற்றிய ஞானம் இல்லை என்றால் எனக்கு இறைவனை பற்றிய ஞானம் இல்லை என்று சொல்ல வேண்டுமே தவிர உங்களுக்கு இறைவனை பற்றிய ஞானம் இல்லை என்பதற்காக இறைவனே இல்லை என்று வாதிடக்கூடாது அதற்க்கு பெயர் பகுத்தறிவு அல்ல அது பக்குவப்படாத பகுத்தறிவு ஆகும்

ஆன்மீகத்தின் பெயரால் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பித்தலாட்டங்களை ஒழுக்க கேடுகளை ஏற்ற தாழ்வுகளை ஜாதிகளை கண்டிக்கிறோம் எனும் பெயரில் மெய்யான ஆன்மீகத்தை உணராமல் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்

காரணம் எந்த இறைவனை நீங்கள் கிண்டல் செய்கிறீர்களோ அல்லது மறுக்கின்றீர்களோ அந்த இறைவன் உங்களை வஞ்சிக்கவில்லை துரோகம் செய்யவில்லை ஜாதியால் நீங்கள் மட்டமானவர்கள் என்று ஒதுக்கி வைக்கவும் இல்லை

எனவே மனிதர்களின் கற்பனையால் உருவாக்கப்பட்ட போலி ஆன்மீகத்தை கண்டித்து பேசுங்கள் அதே நேரம் ஆன்மீக நம்பிக்கையே இல்லை என்று வரட்டு தத்துவம் பேசி இறை சந்நதியில் பாவிகளாக மாறி விடாதீர்கள்

பல தகப்பனுக்கு நான் பிறந்தவன் என்று சொல்பவனும் பகுத்தறிவு பெற்றவன் அல்ல தகப்பனே இல்லாமல் நானே பிறந்தேன் என்று சொல்பவனும் பகுத்தறிவு பெற்றவன் அல்ல

 

சிந்திப்பீர் செயல்படுவீர்

 

படைப்பினங்களை மதிப்போம் படைப்பாளனை மட்டும் துதிப்போம்!!

 

فَاِنْ زَلَـلْتُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْکُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَکِيْمٌ‏

தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன் பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

(அல்குர்ஆன் : 2:209)

 

اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ

‏ நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக
அத்தாட்சிகள் பல இருக்கின்றன

(அல்குர்ஆன் : 3:190)

 

என்றும் நட்புடன் J .இம்தாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...