எனக்குப் பிடித்த கணக்குப் புலி..! : SKM ஹாஜா மொய்தீன் சார்!!

1791 0


அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் தலைமையாசிரியராக பணியாற்றிய ஹாஜி SKM.ஹாஜா மொய்தீன் சற்று முன்னர் மரணித்த செய்தி அதிரை மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள மற்ற ஊர் மக்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்து வருகிறது.

பலதரப்பட்ட மாணவர்களுக்கும் சிறந்த தலைமை ஆசிரியராகவும், கணித ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். உடல் குறைவால் இன்று மரணித்த இவருக்கு அவரிடம் பயின்ற அதிரை மாணவர் ஒருவர் கண்ணீரோடு இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில்,

ஹாஜா மொய்தீன் சார் !

எனக்குப் பிடித்த
கணக்குப் புலி !

சாதி பேதமற்ற
போதி மரம் !

பெருக்கலோ வகுத்தலோ
தன்னம்பிக்கையைக் கூட்டியும்
அறியாமையைக் கழித்துமே
கற்பிப்பார்கள் !

பாடங்களைப்
படித்துத் தராமல்
பழக்கித் தரும் பண்பாளர் !

வகுப்பில் கணக்கோடு
வாழ்க்கையின் கணக்கையும்
புரிய வைப்பதில் பெரியவர் !

மேடை நாடகங்களில்
தர்ம ஞாயங்களைச் சொல்லி
மார்க்கத்துடன் முரண்படாமல்
கலைச்சுவை தந்தவர் !

11ஆம் வகுப்பில்
சிறந்த மாணவனாக
சராசரி மாணவனான
என்னைத் தேர்ந்தெடுத்த
முற்போக்கு சிந்தனையாளர்!

என்
வெளிநாட்டு வாழ்க்கைக்கு
உள்ளூரில் இருந்துகொண்டே
உதவிய உத்தமர் !

புன்னகை பூசிய
பூமுகத்தை
இனி
பூமியில் காண முடியாதா!

அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீளுவோம் !

இவர்
விதைத்தவையே
விருட்சங்களாய்
உலகெங்கிலும் விரவிக் கிடக்கிறோம்…
மறுமை வாழ்வு சிறக்க
மன்றாடுவோம் இறைவனிடம் !

என்று அவருடைய மாணவர் சபீர் அஹமது அதில் குறிப்பிட்டுள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

There are 1 comments

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: