தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் சமூக இடைவெளி,முக கவசம் அணியாமல் மீன் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பரவலை தடுக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.குறிப்பாக தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று(ஜூலை.21) செவ்வாய் கிழமை விசைப்படகுகள் கடலுக்கு சென்று திரும்பகூடிய நாள் அதனால் அதிகாலை முதலே மல்லிப்பட்டிணம் துறைமுத்தில் நடந்து,இருசக்கர வாகனம்,கார்களிலும் மீன்கள் வாங்க சாரை சாரையாக வியாபாரிகள், பொதுமக்கள் வருகை வந்திருந்தனர். இதில் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா வீரியத்தை புரியாமல் வாங்கி செல்கின்றனர்.
தொடர்ந்து இதுபோல சமூக இடைவெளி, முக கவசம் ஆகியவற்றை பின்பற்றாததை பார்க்கையில் அரசின் நடவடிக்கைகள்,அறிவுரைகள், எச்சரிக்கைகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமோ என்ற அச்சம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரவித்தனர்.

Your reaction