டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 சீன செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இன்னொரு பக்கம் இணையத்தில் சீனாவிற்கு எதிராக தீவிரமாக பிரச்சனை செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியர்கள் மூலம் டிவிட்டரில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் சீனாவின் ஆண்ட்ராய்டு செயலிகளை, ஆன்லைன் சாதனங்களை நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சீன செயலிகளுக்கு எதிராக தீவிரமாக இந்த பிரச்சாரம் நடந்தது. இந்த நிலையில் டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் கட்டமைப்பு ஆகிவற்றுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்திய மத்திய அரசின் 69A சட்டம் ( Information Technology Act ) மூலமா இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி இந்த செயலிகள் மீது தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
சீனாவின் செயலிகள் இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் இருக்கிறது. இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகை இதற்கு காரணம் ஆகும். இதன் மூலம் சீனாவிற்கு பெரிய அளவில் வருமானம் கிடைத்தது. இந்த நிலையில் சீனாவிற்கு செக் வைக்கும் வகையில் இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு துறைக்கு வந்த புகார்களின் அடிப்படையில் இந்த செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் என்ற இரண்டு தளங்களில் இருந்தும் இந்த செயலிகள் நீக்கப்படுகிறது. மொபைல் மற்றும் மொபைல் அல்லாத டேப்லெட் போன்ற இணையம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களில் இருந்தும் இந்த செயலிகளும் தடை விதிக்கப்படுகிறது.டேட்டா திருட்டு தொடங்கி பல்வேறு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட பின்வரும் 55 செயலிகளுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
- டிக்டாக் – TikTok
- ஷேர் இட்- Shareit
- க்வாய் – Kwai
- யுசி பிரவுசர் – UC Browser
- பைடு மேப் – Baidu map
- ஸெய்ன் – Shein
- கிளாஸ் அப் கிங்ஸ் – Clash of Kings
- டியு பேட்டரி சேவர் – DU battery saver
- ஹெலோ – Helo
- லைக் – Likee
- யுகேம் மேக் அப் – YouCam makeup
- எம்ஐ கம்யூனிட்டி – Mi Community
- சிஎம் பிரவுசர் – CM Browers
- வைரஸ் கிளீனர் – Virus Cleaner
- ஏபியுஎஸ் பிரவுசர் – APUS Browser
- ரோம்வி – ROMWE
- கிளப் பேக்டரி – Club Factory
- நியூஸ்டாக்- Newsdog
- பிய்ட்டி பிளஸ் – Beutry Plus
- வீ சாட்ட – WeChat
- யுசி நியூஸ் – UC News
- க்யூக்யூ மெயில் – QQ Mail
- வைபோ – Weibo
- செண்டர் – Xender
- கியூகியூ மியூசிக் QQ Music
- கியூகியூ -நியூஸ்பீட் QQ Newsfeed
- பிகோ லைவ் – Bigo Live
- செல்பி சிட்டி SelfieCity
- மெயில் மாஸ்டர் – Mail Master
- பாரலல் ஸ்பேஸ் Parallel Space 31.
- எம்ஐ வீடியோ கால் – ஜியோமி Mi Video Call – Xiaomi
- வீ சிங்க் – WeSync
- இஎஸ் பைல் டிரான்ஸ்பர் ES File Explorer
- விவா விடீயோ – Viva Video – QU Video Inc
- மேய்டு – Meitu
- வீகொ வீடியோ – Vigo Video
- நியூ வீடியோ ஸ்டேட்டஸ் – New Video Status
- டியு ரெக்கார்டர் DU Recorder
- வால்ட் ஹைட் – Vault- Hide
- கேச்சி கிளீனர் – Cache Cleaner DU App studio
- டியு கிளீனர் – DU Cleaner
- டியு பிரவுசர் – DU Browser
- Hago Play With New Friends
- கேம் ஸ்கென்னர் – Cam Scanner
- கிளீன் மாஸ்டர் – Clean Master – Cheetah Mobile
- வொண்டர் கேமரா – Wonder Camera
- போட்டோ வொண்டர் – Photo Wonder
- கியூகியூ பிளேயர் QQ Player
- வீ மீட் – We Meet
- சுவீட் செல்பி – Sweet Selfie
- பெய்டு டிரான்ஸ்லேட் – Baidu Translate
- வீ மேட் Vmate
- கியூகியூ இன்டர்நேஷனல் QQ International
- கியூகியூ செக்யூரிட்டி சென்டர் QQ Security Center
- கியூகியூ லாஞ்சர் QQ Launcher
- யு விடீயோ U Video
- V fly Status Video
- மொபைல் லோஜன்ட் Mobile Legends
- டியு பிரைவசி DU Privacy