தோப்புத்துறை குறும்படம் வெளியீடு!

876 0


நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோர ஊரான தோப்புத்துறையில் நெய்தல் நிலமும்,மருதம் நிலமும் சூழ்ந்த அழகிய பகுதியாகும்.

தோப்புக்குள் ஊர் இருப்பதும், துறைமுகம் பின்னணியும் இவ்வூருக்கான பெயர் சிறப்பாகும்.

இந்துக்கள், முஸ்லிம்கள்,தலித்கள் எல்லோரும் ஒற்றுமையாக
வாழும் இவ்வூரின் சுருக்கமான வரலாற்றை முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF)
10 நிமிட குறும்படமாக எடுத்துள்ளது.

சுற்றுச்சூழல்,கல்வி விழிப்புணர்வு,கலை,இலக்கிய சிந்தனை ஆகியவற்றுக்காக இயங்கும் இவ்வமைப்பு தோப்புத்துறையில் அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்ற உள்ளூர் சேவை அமைப்பாகும்.

இவ்வமைப்பு எடுத்த குறும்படத்தை ,MSFன் நிறுவனர்களின் ஒருவரான மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட,அதன் முதல் பிரதியை ஜமாஅத் மன்ற செயலாளர் ஜனாப்.அபூபக்கர் சித்திக் அவர்கள்,இரண்டாம் பிரதியை இந்து நற்பணி மன்ற தலைவர் திரு.சிவக்குமார் அவர்கள், மூன்றாம் தோப்புத்துறை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஜனாப் நஜீப் அவர்களும் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வுக்கு MSF தலைவர் முகம்மது இம்தியாஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றிட ,MSF செயலாளர் H.அகமது ரயான் அவர்கள் நன்றி கூறினார்.

காசித் தெருவில் நடைபெற்ற இந்நிகழ்வு சமூக இடைவெளியுடன் 10 நிமிடங்கள் மட்டுமே நடைப்பெற்றது.

இதில் ஜமாத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளும் தோப்புத்துறை சமூக ஆர்வலர்களும் , பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும்,திரளான MSF உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்த குறும்படம் வரலாற்றின் முதல் பாகம் என்றும்,அடுத்தடுத்த பாகங்கள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் என்று MSF அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றை மறப்பது மக்களின் இயல்பாகும்.
அதை நினைவூட்டி ஆவணப்படுத்துவது நமது கடமையாகும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: