இந்திய-சீன எல்லையில் சீன வீரர்களின் தாக்குதலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர், பல ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்த வலைதளவாசிகள் பலர், சீன தயாரிப்புகளை இனி பயன்படுத்தப்போவதில்லை எனவும், சிலர் அதற்கும் மேலாக சென்று சீனப் பொருட்கள் சிலவற்றை சேதப்படுத்தி படங்களை பதிவேற்றவும் செய்தனர்.
BoycottChina, #BoycottMadeinChina மற்றும் #BoycottChineseProducts போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.
இந்நிலையில், சீனாவின் மீதுள்ள கோபத்தில், சீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவப்படத்தை எரித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் மேற்கு வங்கத்தின் அசான்சோலைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள்.
இந்த குழப்பத்தை வைத்து சமூகவலைதளங்களில் இந்த வீடியோ ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
— Lavanya Ballal | ಲಾವಣ್ಯ ಬಲ್ಲಾಳ್ (@LavanyaBallal) June 18, 2020
pic.twitter.com/OlpjHDj1ej
Your reaction