அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய கடைகளை சில வருடங்களுக்கு முன்னர் ஏலம் அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டது.
மற்ற இடங்களை காட்டிலும் அதிரையில் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட கடைகளை தனியார்கள் உள் வாடகைக்கு விட்டு போட்ட பணத்தை சம்பாதித்து விட்டனர். ஆனால் வாடகைதாரர்கள் முறையாக பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை இதுவரை செலுத்தவில்லை.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் உள்ளிட்டோர் முறையாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர். அரசின் இந்த நடவடிக்கையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.







Your reaction