Friday, April 19, 2024

குடிக்காக பிறந்த குடிமகனே முழுவதையும் படி!

Share post:

Date:

- Advertisement -

போதைப் பொருள் உச்சம் நீள்கிறது…

சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடிப்பவனின் ரத்தத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கு போய் செயல் இளக்க செய்கிறது.
இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பது ஒரு

“ மன நோயே” !

  1. பொழுதுபோக்காக ( ஜாலிக்காக ) எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்…………………
  2. இன்று மனசு சரியில்லை ( ! ? ) எனச் சொல்லி சொல்லியே தினமும் குடிப்பவர்களும்…………………
  3. விஷேசத் தினங்களில் தங்களின் “மகிழ்ச்சி”யை ( ! ? ) வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் குடிப்பவர்களும்…………………….
  4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டு செல்பவர்களும்………………….
  5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும்……………………………
  6. இன்று மட்டும்தான் குடிப்பேன் ( ! ) நாளை குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்பவர்களும்…………………………
  7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக்கொண்டவர்களும்………………………….
  8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) போதையைப் பயன்படுத்துகிறவர்களும்……………………..
  9. குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துபவர்களும்……………………………….
  10. மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்பவர்களும்………………….
  11. குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் “420”களும்…………….
  12. போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “…..“ …………………………

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

என்னதான் பாதிப்புகள் ?

  1. ஞாபக மறதி
  2. உடல் உறுப்புகள் பாதிப்பு
  3. பொய் சொல்வது, திருடுவது, ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல்
  4. கொலைக் குற்றங்கள் செய்யத் தூண்டுதல்
  5. கை கால் நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள்
  6. தற்கொலை முயற்சி செய்தல்.
  7. குடும்ப உறவு விரிசல் அடைதல் குறிப்பாக மனைவியின் நடத்தையில் சந்தேகித்தல்
  8. குழந்தையின்மை
  9. சமூகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டு வில(க்)கி இருத்தல்.
  10. இறுதியில் அகால மரணம்.

“குடி” நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!

என்னதான் தீர்வு ?

  1. குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.
  2. மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.
  3. போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.
  4. பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.
  5. சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு“கவுன்சிலிங்” செய்வதன் மூலம் குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.
  6. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான “ஜூன் 26” அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து தீர்மானம் ஏற்றி ” இணைவழி” அமைதிப் போராட்டம் நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.
  7. நமதூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், சமுதாய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனால் நமது சமுதாய மக்களுக்கு ஏற்படுகிற இழப்பீடுகளை கருத்தில்கொண்டு சட்ட சிக்கல்களை ஆராய்ந்து மதுபானக் கடைகளை அப்புறப்படுத்த முயற்சி செய்யலாம்.
  8. நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் “பூரண மதுவிலக்கு சட்டத்தை”இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

ஈமான் கொண்டோரே ! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா ?

திருக்குர்ஆன் 5:90,91

ஆக்கம்: MST சிராஜுதீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...