அதிராம்பட்டினம் கார் வேன் டவேரா ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் இன்று காலை 11 மணியளவில் இணைய வழி போராட்டம் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளிவிட்டு பதாகைகள் ஏந்தியவாறு தங்கள் தங்கள் வாகனங்கள் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை வாகனக் கடன்களை அடாவடியாக அபராதத்துடன் வசூல் செய்வதை தடுக்க வேண்டும், கொரோனாவால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து ஓட்டுனர்களுக்கும் அரசு மானியத்துடன் வங்கி கடன் வழங்க வேண்டும், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பேரிடர் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.




Your reaction