மல்லிப்பட்டிணம் துறைமுகம் குறித்து மீன்துறை ஆய்வாளர் அறிவிப்பு

1067 0


தஞ்சாவூர் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மல்லிப்பட்டினம் மீன்துறை ஆய்வாளர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்கத்தின் மூலம் மீன்பிடி துறைமுக வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்தல், கழிவறைகளை பயன்படுத்துவோர் வசூல் கட்டணம் மற்றும் சிறிய வகை டீ கடைகள், இட்லி கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு வாடகை வசூல் செய்தல் வரும் 12.06.2020 அன்று பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வாகன நுழைவு கட்டணம் :

சைக்கிள் – ரூ. 5

இருசக்கர வாகனம் – ரூ. 10

மினிவேன் – ரூ. 50

லாரி – ரூ. 100

ஆட்டோ – ரூ. 20

டாரஸ் – ரூ. 300

சுற்றுலா பேருந்து – ரூ. 100

சுற்றுலா வேன் – ரூ. 50

டெம்போ – ரூ. 50

டிப்பர் லாரி – ரூ. 200

இன்குபேட்டர் வண்டி – ரூ. 200

கார் – ரூ. 25

சிறியவகை இட்லிகடை – ரூ. 50

டீக்கடை – ரூ. 50

தள்ளுவண்டிகடைகள் – ரூ. 50

கழிவறை – ரூ. 5 / நபர்

குளியலறை – ரூ. 10 / நபர்

குறிப்பு : மாதாந்திர அடிப்படையில் அதிக ஏலத்தொகையில் ஏலம் எடுப்பவருக்கு ஏலம் இடப்படும். ஏலம் இடப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கு டெபாசிட் செய்ய வேண்டும்.

இவ்வாறு மீன்வளத்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: