கிட்னி பாதிக்கப்பட்டோர் குறித்த முதற்கட்ட பட்டியல் அதிரை ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

2880 0


அதிரை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கிட்னி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டயாலிசிஸ் செய்வதற்காக தஞ்சை, திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து செலவு மற்றும் அலைச்சல் காரணமாக ஒருவிதமன அழுத்தத்திற்கு நோயாளிகள் ஆளாகுகின்றனர். இந்நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிரையிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய டயாலிசிஸ் மையத்தை உருவாக்க ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. சுற்றுவட்டார மக்களுக்கு மிகவும் பயனளிக்க கூடிய இந்த முடிவுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று அதிரை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் மக்களிடையே கிட்னி பாதிப்பு குறித்து இணையவழி கணக்கெடுப்பை அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தியது. இதில் பலர் பங்கேற்று தங்களது விபரங்களை பதிவு செய்தனர். அவ்வாறு தயாரிக்கப்பட்ட முதற்கட்ட பட்டியலை சீலிட்ட கவரில் வைத்து ஷிஃபா மருத்துவமனை நிர்வாகிகளில் ஒருவரான இம்தியாஸ் அகமதுவிடம் அதிரை எக்ஸ்பிரஸ் செயல் அலுவலர் அஸ்ரஃப், தலைமை நிருபர் அன்சர்தீன் ஆகியோர் ஒப்படைத்தனர். முதற்கட்ட பட்டியலில் விடுபட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து தங்கள்/உறவினர்/நண்பர்களின் தகவல்களை பதிவு செய்யலாம். பதிவு செய்ய தெரியாதவர்கள் 95510 70008, 9944426360, 9500293649 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்புக்கொண்டால் அதிரை எக்ஸ்பிரஸ் குழுவினர் தங்களுக்கு உதவ தயாராக உள்ளனர்.

https://forms.gle/EzCyftS93JL6d7EM7

நோயாளிகளின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: