அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF) புதிய முயற்சி

1751 0


இன்ஷா அல்லாஹ் நமதூரின் உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அதிரை வாழ் சகோதரர்கள், நமதூர் மற்றும் பொது மக்களின் பொதுவான வளர்ச்சி, மேம்பாடு சம்மந்தமான பொது விஷயங்களில் உள்ள தீர்க்கப்பட வேண்டிய குறைகள் இருப்பின், அதனை தீர்ப்பதற்கு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) சார்பாக குறைகள் தீர்ப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நமதூர் பொது மக்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுமம் AAMF GRIEVENCES (9488111121) மற்றும் aamforum.2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தாங்கள் அறியும் குறைகளை தெரிவிக்க அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF) அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF) சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறை தீர்க்கும் மையத்திற்கு கீழ்காணும் சகோதரர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:
ஒருங்கிணைப்பாளராக: ஜனாப். B. ஜமாலுதீன் அவர்களும்,
சட்ட ஆலோசகராக: வழக்கறிஞர்: Z. முஹம்மது தம்பி அவர்களும், ஆலோசனை குழு உறுப்பினர்கள்:
ஜனாப்: N. முஹம்மது ஜபருல்லாஹ் மற்றும் பி.எம்.எஸ் முஹம்மது அமீன் ஆகியோரும் செயல்படுவார்கள்.

மேற்கண்ட வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் பதியப்படும் குறைகளை உடனுக்குடன் சம்பந்தபட்ட துறைகள் அல்லது அதிகாரிகளிடம்
கொண்டு செல்லப்பட்டு தீர்க்க முழு முயற்சி செய்யப்படும்.

இம்முயற்சி பற்றிய தங்களின் மேலான கருத்துககளும் , ஆலோசனைகளும்
கூறலாம் என்று அறிவித்து இருக்கிறார்கள்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: