தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் மல்லிப்பட்டிணம் 1 வது வார்டு வடக்குத்தெருவில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து காணப்படுகிறது.ஏற்கனவே கம்பத்தின் சிறு சிறு பகுதிகள் வெடிப்பு ஏற்பட்டு கீழே கொட்டி வருகின்றன.
இந்த மின்கம்பம் மேலும் வெடிப்புகள் அதிகரித்து சாய்ந்து விடும் அபாயம் இருக்கிறது.மின்கம்பம் அமைந்துள்ள பகுதியில் மக்கள் நடமாடும் பகுதியாகவும் இருக்கிறது.பெரியதொரு அசம்பாவிதம் நடைபெறா
முன்கூட்டியே இதனை உடனடியாக சீர்செய்து புதிய மின்கம்பம் அமைத்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Your reaction