சீமானுடன் இஸ்லாமிய கூட்டமைப்பினர் திடீர் சந்திப்பு!

1673 0


சீமான் உடன் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு தன் மீது பரப்பும் அனைத்தும் பொய்யானவை,கற்பனையானது என விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்தார் சீமான்..

இன்று 22:05:2020 வெள்ளிக்கிழமை மாலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர் சீமான் அவர்கள் இஸ்லாமிய தலைவர்களை வெளியே வந்து வரவேற்று அழைத்துச் சென்றார் சுமார் 1.1/2 மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது பல்வேறு விசயங்கள் குறித்து மனம் விட்டு பேசபட்டது பல்வேறு விசயங்கள் குறித்து சீமான் அவர்கள் விளக்கம் அளித்தார்..

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி சேர்ந்த சதாம் உசேன் என்பவரின் திருமணம் அதை தொடர்ந்து எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் சீமான் அவர்கள் குறித்தும் நாம் தமிழர் கட்சி குறித்து எழுந்த சரச்சை என அனைத்துக்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக சந்திப்பு நடைபெற்றது..

சீமான் அவர்கள் இடத்தில் பல்வேறு விசயங்களை சமூக வலைதளங்களில் எழும் கேள்விகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையை கொண்டது நாம் தமிழர் கட்சி என்ற முஸ்லிம்கள் மத்தியில் உள்ள ஐயம் என முன் வைத்து இஸ்லாமிய தலைவர்கள் பேசினார்கள் அனைத்தையும் விளக்கம் அளித்து பேசிய சீமான் அவர்கள்.

என் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் வைக்கும் விமர்சனங்கள்,குற்றச்சாட்டுகள் எல்லாம் மேலோட்டமாக பார்த்து வைப்பது அனைத்தும் உண்மைக்கு புறம்பானது, பொய்யானது மேலும் கற்பனையானது நான் எப்போதும் எந்த காலகட்டத்திலும் முஸ்லிம்கள் உடன் துணை நிற்பேன் என்பதை ஆணிதரமாக பல்வேறு விசயங்களை இஸ்லாமிய தலைவர்கள் இடத்தில் விளக்கி அனைத்து விசயங்களுக்கும் தெளிவான விளக்கம் கொடுத்து முற்று புள்ளி வைத்தார் சீமான்..

இந்த சந்திப்பில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர்,பொது செயலாளர் முஹம்மது சித்திக், தமுமுக பொது செயலாளர் ஹாஜா கனி, மமக துணை பொதுச் செயலாளர் யாக்கூப் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காஷ்பி ஹஜரத், ஜமாத்துல் உலமா மூத்த தலைவர் தர்வேஷ் ரஷாதி ஹஜரத், எஸ்டிபிஐ பொது செயலாளர் அச உமர் பாருக், எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் கரிம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், மமக காஞ்சி மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: