மல்லிப்பட்டிணம் VIP நண்பர்கள் குழுவினர் பல்வேறு நல பணிகளையும்,உதவிகளையும் அதாவது மருத்துவ உதவி,ஏழ்மையானவர்களுக்கு வாழ்வாதர உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வருடா வருடம் ரமலான் மாதத்தின் இறுதியில் மல்லிப்பட்டிணம் மற்றும் சேதுபவாசத்திரம் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு உணவு சமைத்து கொடுப்பது வழக்கம்.இப்போது கொரோனா ஊரடங்கினால் பெருநாளை கொண்டாட முடியாத கடுமையான பாதிப்புக்குள்ளான 40 குடும்பங்களுக்கு தேவையான ரமலான் கிட் வழங்கினார்கள்.
இதில் அரிசி,காய்கறி,மளிகை,எண்ணெய் பொருட்கள்,தேங்காய், இடியாப்ப மாவு மற்றும் ரொக்கம் 200 ரூபாய் உள்ளிட்டவை அடங்கும்.இந்த நிகழ்ச்சியை கண்டு பலரும் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Your reaction