தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி எந்த நேரமும் மின் தடங்கல் ஏற்படுகின்றது.இதனால் பொதுமக்கள், வியாபாரிகள்,பெண்கள்,குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
காரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்களின் மின்சார தேவை அதிகரித்துள்ளது.இதனால் சீரான குடிநீர் பெறுவதிலும் மிக சிரமம் உள்ளது.ரமழான் நேரங்களில் இவ்வாறு இருப்பது மிகுந்த சிரமத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது.விடியற்காலை சஹர் நேரங்களிலும் மாலை நேரங்களிலும் இதுபோன்ற மின்வெட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தயவுசெய்து தாங்கள் சீரான மின்விநியோகம் வழங்கி துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Your reaction