பட்டுக்கோட்டை: மங்கை உள்ளிட்ட முக்கிய கடைகளுக்கு சீல்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகிறது.
அவசர தேவைகளுக்காக வெளியில் வரும் நபர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டையில் இந்த விதிமுறைகளை பின்பற்றாத குளிர்சாதனம் பொருத்தப்பட்ட கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகலில் பட்டுக்கோட்டைக்கு விஜயம் செய்த சார் ஆட்சியர், விதிமுறைகளை பின்பற்றாத மங்கை சில்க்ஸ்,அட்சயா உள்ளிட்ட கடைகளுக்கு கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அடுத்து நகராட்சி ஊழியர்கள் கடைகளுக்கு சீல் வைத்தனர்.



Your reaction