அதிரையில் பட்டினி நோன்பு வைக்கும் வட மாநிலத்து தொழிலாளர்கள்!

2338 0


அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளர் தொழில் நிமித்தமாக தங்கியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் இவர்களுக்கு தொழிற்பாதிப்பு ஏற்பட்டு முடங்கினர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.

இதனிடையே ரமலான் காலம் வந்துவிட்டதால் கடமையான ரமலான் நோன்பை நோற்கும் நிலை வந்தன.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இவர்களுக்கு அரசு சொற்ப அளவிலான உணவு பொருட்களை மட்டுமே வழங்கியிருந்தது.

அது போதுமானதாக இல்லாத போதும் இவ்வளவு நாட்கள் போதுமாக்கி கொண்டனர்.

இந்நிலையில் ரமலான் நோன்பு நோற்க போதிய உணவு பொருட்கள் இல்லாததாலும், கையில் காசு இல்லாத காரணத்தினால் கடந்த ஒருவார காலமாக பட்டினி நோன்பு நோற்று வருவதாக பீகாரை சேர்ந்த ரஹ்மத்துல்லா என்ற வாலிபர் கூறினார்.

எனவே தயாள குணம் கொண்ட தனவந்தர்கள் கடைதெருவில் வசிக்கும் வடனாட்டு ஊழியர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி அவர்களின் பசி போக்கிட வேண்டுகிறோம்.

அவர்களை நேரடியாக அனுகி உதவிட அதிரை எக்ஸ்பிரஸ் துணை நிற்கும்.

தொடர்புக்கு :9944426360

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: