டாஸ்மாஸ்கில் பரவாதது சலூன் கடைகளை திறந்தால் பரவுமாம்… ரவிக்குமார் MP காட்டம் !

894 0


லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சலூன் கடைகள் மூடப்பட்டு உள்ளன.. விஜயகாந்த்துக்கு பிரேமலதா ஷேவ் செய்து, டை அடித்து விட்டதுபோல, முடிந்தவரை சிலர் வீடுகளுக்குள்ளேயே இதை செய்து கொள்கின்றனர் என்றாலும், பெரும்பாலானோர் ஷேவிங் செய்ய முடியாமலும், முடி வெட்ட முடியாமலும் தாடி மீசையை டிரிம் செய்ய முடியாமலும், தலைக்கு டை அடிக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் பெரும்பாலான சவரத் தொழிலாளர்களும் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். அரசும் எந்த இவர்களுக்கு எந்த பொருளாதார உதவியையும் செய்யவில்லை. அதனால் முடிதிருத்துவோர் நலசங்கத்தினர் சில தினங்களுக்கு முன்பு ஒரு கோரிக்கை வைத்திருந்தனர்.

“சலூன் கடைகளை வாரத்தில் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். மாஸ்க், கிளவுஸ் அணிந்து நாங்கள் பணிபுரிய தயாராக உள்ளோம். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டும் அவை பரிசீலிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில், பெரும்பாலான தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 34 வகையான கடைகளையும் இன்று முதல் திறந்து விட்டுள்ளனர். ஆனால் சலூன், பியூட்டி பார்லர்களுக்கு மட்டும் விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைதான் சுட்டிகாட்டி விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 3-ம்தேதியே இவர் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

அதில், “சிகை திருத்துவோரைக் காப்பாற்றுங்கள்… சிகை அலங்கார நிலையங்களுக்குத் தடை விதித்திருப்பது சரிதானா? நோய் தொற்று ஏற்படாமல் கடையை நடத்துவதற்கு அனுமதிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் கடைகள் மூடிக்கிடக்கின்றன. 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் பகுதிகளிலாவது கடை திறக்க அனுமதிக்கலாமே‬” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இப்போது வரை சலூன் கடையை திறக்கவே இல்லை. அதற்கான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் ரவிக்குமார் MP திரும்பவும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், “என்னங்கய்யா உங்க லாஜிக்… டாஸ்மாக்கில் ஆயிரக் கணக்கானவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும்போது கொரோனா பரவாதாம், முடிதிருத்தும் கடைகளைத் திறந்தால் பரவிவிடுமாம்.என்னங்கய்யா உங்க லாஜிக்! அரசே சமூகப் பாகுபாடு காட்டுவது சட்டத்துக்கு உகந்ததல்ல!” என்று சற்று காட்டமாகவே பதிவிட்டுள்ளார்.

விசிக ரவிக்குமார் MPயின் இந்த ட்வீட்டுக்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். பலர் இந்த கருத்தை ஆமோதிக்கின்றனர்.. இன்னும் சிலரோ, “இன்னொரு கூத்து இருக்கு சார். வீட்டுக்குள்ள ac போடக்கூடாதாம். ஆனா train ல மட்டும் பிலால் ac-யாம்” என்று ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இப்போதைக்கு சலூன் கடைகள் மட்டுமே திறக்காமல் உள்ளதால், எம்பியின் இந்த ட்வீட் படுவைரலாகி வருகிறது.

https://twitter.com/WriterRavikumar/status/1259703018942939136?s=19

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: