தமிழகத்தில் 34 வகை கடைகள் திறக்க அனுமதி, அதிரைக்கு பொருந்துமா இந்த அறிவிப்பு…!

1071 0


தமிழகத்தில் 34 வகையான கடைகள் திறக்க மாநில அரசு அனுமதியளித்து இருக்கிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24-ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. கடந்த மே 2 ஆம் தேதி அன்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) பல செயல்பாடுகள், பணிகள், மே 11ஆம் தேதி திங்கள்கிழமை முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாக மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பிற தனிக் கடைகள் பிரிவில் கீழ்க்கண்ட கடைகள் திறக்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:

டீக்கடைகள் (பார்சல் மட்டும்)

பேக்கரிகள் (பார்சல் மட்டும்)

உணவகங்கள் (பார்சல் மட்டும்)

பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்

கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்

சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்

மின் சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

வீட்டு உபயோக இயந்திரங்கள் (House Hold appliances) மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்

மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்

சிறிய நகைக் கடைகள் (குளிர் சாதன வசதி இல்லாதவை)

சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை- ஊரக பகுதிகளில் மட்டும்)

மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்

டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்

பெட்டி கடைகள்

பர்னிச்சர் கடைகள்

சாலையோர தள்ளுவண்டி கடைகள்

உலர் சலவையகங்கள்

கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்

லாரி புக்கிங் சர்வீஸ்

ஜெராக்ஸ் கடைகள்

இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்

இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்

நாட்டு மருந்து விற்பனை கடைகள்

விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்

டைல்ஸ் கடைகள், பெயிண்ட் கடைகள்

எலக்ட்ரிக்கல் கடைகள்

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்

நர்சரி கார்டன்கள்

மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்

மரம் அறுக்கும் கடைகள்

முடிதிருத்தும் நிலையங்கள் (சலூன்கள்), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்கக் கூடாது என தெரிவிக்கப்படுகிறது.இந்த அறிவிப்புகள் அதிரைக்கு பொருந்துமா என்று வியாபாரிகள் குழம்பி வருகின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: