தற்சார்பு பொருளாதாரத்தின் பால் மீளும் அதிரையர்கள் !

1652 0


கொடூரமான கொரானா நோயால் உலகமே அடங்கி போயுள்ளது. இதனால் IT நிறுவனங்கள் முதல் அன்றாடம் பிழைப்பு நடத்தும் அங்காடிகள் வரை முழு அடைப்பு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருளாதாரத்தை ஈட்ட பல்வேறு முயற்சிகளை அதிரையர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்பொரு காலத்தில் ஒயிட்காலர் ஜாப் மட்டுமே பார்த்து வந்த அதிரையர்கள் பலரை பல படித்தரங்களை இறக்கி உழைக்க வைத்துள்ளது கொரோனா!

அந்த வகையில் இன்று அதிரையை சுற்றிலும் சுய தொழில்கள் மிகுந்து ஸ்மால் ஜப்பானாகவே மாறியுள்ளது என்றால் மிகையில்லை.

வீட்டுக்கு வீடு காய்கனிகடைகள், பழங்கள், துணிமணிகள், உணவகம் என தொழில்களை செய்து தற்சார்பு பொருளாதாரம் ஈட்டி வருகின்றனர்.

20 வயதுக்கு மேல் ஊரில் இருக்க வாய்ப்பு கிட்டாத பலரும் இன்று அயல் தேசங்களில் அள்ளல் படுவதை கண்ட பெண்மணிகள், அங்குள்ள துயரங்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டணர் என்றே கூறலாம்.

இதன் காரணமாகவே உள்ளூர் வியாபாரங்களில் அதிகளவு ஈடுபடுகின்றனர் என்கிறது ஆய்வு.

இது ஒருபுறமிருக்க ஊரில் இருக்கும் எல்லோரும் ஒரே துறையை தேர்ந்தெடுப்பதில் நடைமுறை சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.

உதாரணத்திற்கு ஒருவர் காய்கனி கடை வைத்தால் அதன் அருகிலேயே மற்றொரு காய்கனி கடை வைப்பது அறிவார்ந்த செயல் அல்ல மாறாக அதன் அருகே அரிசி அல்லது இதர பொருட்களின் கடைகளை வைப்பதால் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும் என மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்.

கொஞ்சம் மாத்தி யோசிங்க…

பல ஆண்டுகாலம் வெளிநாடுகளில் காலம் கடத்திய நாம் உள்ளூரில் உருப்படியான தொழிலை தொடங்கி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

என்ன தொழில் செய்யலாம் எப்படி செய்யலாம் என்பதை நிதானித்து முடிவெடுங்கள். வெற்றி உங்கள் வாழ்வை வளமாக்கும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: