Thursday, April 18, 2024

இந்திய அளவில் கேப்டன்களை உருவாக்கி வரும் அதிரையர்… சத்தமின்றி தொடரும் சாதனை !

Share post:

Date:

- Advertisement -

முன்பொரு காலம் இருந்தது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் விடுமுறை தினம் என்றாலோ அல்லது மாலை நேரம் என்றாலோ விளையாட்டு மைதானங்களில் விளையாடியே பொழுதை கழிப்பர் என நம் எதிர்கால தலைமுறைகள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு மைதானங்களில் சென்று விளையாடுவது என்பது இக்காலத்தில் அரிதாகிகிட்டது. செல்போனின் வருகை மனிதனை மைதான விளையாட்டில் இருந்து தூரமாக்கிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இக்கால சிறுவர்களும், இளைஞர்களும் செல்போனில் உள்ள கேம்களுக்கு அடிமை ஆகிவிட்டார்கள்.

நிகழ்கால சிறுவர்களும் இளைஞர்களும் இப்படி இருக்க, கைப்பந்து விளையாட்டில் சத்தமின்றி சாதித்து வருகிறார் நம் அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த சாகுல். இந்திய கைப்பந்து அணியின் கேப்டன் ஜெரோம் வினீத், தன்னுடைய வாழ்க்கை வரலாறை குறிப்பிடும்போது, தன் பயிற்சியாளர் சாகுல் குறித்து கூறும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அறிவதற்காக நம் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிற்சியாளராக பணியாற்றும் சாகுலை தொடர் கொண்டோம்.

பயிற்சியாளர் சாகுல்

நம் அழைப்பை ஏற்ற அவர் நம்மிடம் பல தகவல்களையும் தான் கடந்து வந்த பாதையையும் விவரித்தார்.

அதிரையை சேர்ந்த சாகுல், தன் பள்ளிப்படிப்பை திருவாரூர் மாவட்டம் எடைமலையூரில் முடித்துள்ளார். எடைமலையூரில் படித்துக்கொண்டிருக்கும்போது 16 வயதிற்கான கைப்பந்து போட்டியில் தமிழக அளவில் முதலிடம் பிடிக்கிறார். பின்னர் 2003-2006ஆம் காலக்கட்டத்தில் கல்லூரி படிப்பை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் படிக்கும்போது, அகில இந்திய பல்கலைக்கழக அணிகளுக்கு இடையேயான தொடரில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்காக விளையாடி தமிழக அளவில் முதலிடம் பெறுகிறார்.

அதன் பின்னர் ஈரோட்டில் உள்ள பாரதி பள்ளியில் பயிற்சியாளராக சேர்ந்துள்ளார். அவர் பயிற்சியளித்த அந்த அணி மாநில மற்றும் தேசிய அளவிலான தொடர்களில் முதலிடம் பெற்று தங்க பதக்கத்தை வென்றுள்ளது. அப்போது அந்த பள்ளியில் சாகுலிடம் பயிற்சி பெற்ற முத்துசாமி என்ற வீரர் தற்போது இந்திய கைப்பந்து அணியில் இடம்பிடித்து விளையாடுவதுடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கேரளா பிரிவில் பணியாற்றியும் வருகிறார். அதே அணியில் விளையாடிய சத்ரியன் என்பவர் ரயில்வேயிலும், இளமாரன் மற்றும் பிரதீப் ஆகியோர் தமிழ்நாடு போலீஸ் அணியிலும் விளையாடி வருகின்றனர். சந்தோஷ் என்பவர் பாரத் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு பேருமே ஈரோடு பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேர்ந்து சாகுலிடம் பயிற்சி பெற்று பல பதங்கங்களை வாங்கி தற்போது பல்வேறு இடங்களில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

பாரதி பள்ளியில் சாகுலிடம் பயிற்சி பெற்று தேசிய, மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றவர்கள்

தற்போதைய இந்திய கைப்பந்து அணிக்கு கேப்டனாக இருக்கும் ஜெரோம் வினீத்தை, வாலிபால் தொடர் ஒன்றில் சாகுல் பார்த்துள்ளார். பார்த்ததும், நல்லா ஹெய்ட்டா இருக்கியே, நீ என்னுடன் வா… நான் பயிற்சி அளிக்கிறேன் என அழைத்துள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டனாக உள்ள ஜெரோம் வினீத், 3 மாதம் அதிராம்பட்டினத்தில் தங்கி இருந்து சாகுலிடம் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் ஜெரோம் வினீத், ஜமால் முகம்மது கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, சென்னை SRM கல்லூரியில் இருந்து வந்த அழைப்பை அடுத்து அங்கு சென்று கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான கைப்பந்து போட்டியில் ஜெரோம் வினீத் தலைமையில் இந்திய அணி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர் சாகுலுடன் தற்போதைய இந்திய கைப்பந்து அணி கேப்டன் ஜெரோம் வினீத், நடுகள வீரர் முத்துசாமி, சத்ரியன்

கேரளாவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கைப்பந்து தொடரில் தமிழ்நாடு சப்-ஜூனியர் அணிக்கு தலைமை பயிற்சியாளராகவும் சாகுல் இருந்துள்ளார். தற்போது ஈரோட்டில் உள்ள கொங்கு கல்லூரியில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் அதிரையை சேர்ந்த சாகுல். விளையாட்டில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த பலர் திறமை இருந்தும், அத்துறையிலேயே சேர்ந்து பணியாற்றாமல் குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு வெளிநாட்டிற்கு சென்றுவிடுகின்றனர் என வேதனையுடன் குறிப்பிட்ட அவர், நம்மூரிலேயே இளைஞர்கள் பலர் முழுமையான உடல்தகுதியுடன் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் மேற்கொண்டு முயற்சி எடுக்காததும், பெற்றோர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததுமே அதிராம்பட்டினம் வீரர்கள் இன்று வரை அடையாளம் காணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என தெரிவித்தார். அதிரையை சேர்ந்த திறமை மற்றும் தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் பலர், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரியில் சேர்ந்து அத்துறையில் சாதிக்க வேண்டும் என கூறிய சாகுல், அவ்வாறு இருக்கும் இளைஞர்களுக்கு தானே நிச்சயம் உறுதுணையாக இருப்பேன் என்றும் நம்மிடம் உறுதிபட கூறினார்.

– அதிரை அன்சர்தீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...