Thursday, March 28, 2024

அதிராம்பட்டினமா ? மேடம் பார்ப்பதில்லை! – பட்டுக்கோட்டை மருத்துவமனையின் அடாவடி !

Share post:

Date:

- Advertisement -

அதிரையை சேர்ந்த பெண்கள், பெரும்பாலும் பிரசவத்திற்கு பட்டுக்கோட்டையில் உள்ள மகப்பேறு மருத்துவர்களிடமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸை காரணம் காட்டி அதிரை மக்களை பட்டுக்கோட்டை மருத்துவமனைகள் புறக்கணிப்பது தொடர் கதையாகிவிட்டது.

அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன்பு அதிரையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணின் சகோதரர் ஒருவர், பட்டுக்கோட்டை மகேஸ்வரி மருத்துவமனைக்கு இரவு 8 மணியளவில் போன் செய்து டாக்டர் பார்ப்பாங்களா ? என கேட்டுள்ளார். மறுமுனையில் போனை எடுத்த ஊழியர், நீங்கள் எந்த ஊர் ? என கேட்கிறார். போன் செய்த நபர், நான் துவரங்குறுச்சியில் இருந்து பேசுகிறேன் என்றதும், ஆம் நாளை 12 மணிக்கு வாருங்கள், 12 மணி முதல் 3 மணி வரை டாக்டர் பார்க்கிறார் என்றும் நாளை வருவதற்கு முன்பு காலை 10 மணியளவில் போன் செய்துவிட்டு வாருங்கள் என கூறுகிறார் அந்த மருத்துவமனை ஊழியர்.

இதனையடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த நபர், மகேஸ்வரி மருத்துவமனைக்கு போன் செய்து டாக்டர் பார்ப்பாங்களா ? என கேட்கிறார். மறுமுனையில் பேசும் மருத்துவமனை ஊழியர், எங்கிருந்து பேசுறீங்க என வினவுகிறார். அந்த நபர் அதிராம்பட்டினத்திலிருந்து பேசுகிறோம் என்றதும், பேஷன்ட் பெயர் என்ன, எத்தனை மாதம் ஆகிறது என மறுகேள்வி கேட்கப்படுகிறது. அந்த நபர் எல்லாவற்றையும் எடுத்துரைத்த பிறகு, நாளை காலை 10 மணிக்கு கேக்குறீங்களானா என ஊழியர் சொல்ல, ஏன் டாக்டர் பார்க்கிறாங்களா என்னா என அந்த நபர் மீண்டும் கேட்கிறார். மேடம் பார்க்குறாங்கதான்… ரொம்ப எமெர்ஜென்சியாக வரும் பேஷன்டை மட்டும் பார்க்குறாங்க என்கிறார் மருத்துவமனை ஊழியர்.

உடனே சம்மந்தப்பட்ட நபர் நான் சிறிது நேரம் முன்பு துவரங்குறிச்சியில் இருந்து பேசுகிறேன் என கூறியவுடன் பார்க்குறாங்க வாருங்கள் என கூறினீர்கள், இப்போது அதிராம்பட்டினம் என்றதும் OP பார்ப்பதில்லை என கூறுகிறீர்களே என மருத்துவமனை ஊழியரை கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்.

மருத்துவமனை ஊழியரோ, கேள்விகளுக்கு பதிலின்றி முன்னுக்கு பின் முரணாக பேசி மலுப்புகிறார். நான் மேடத்திடம்(டாக்டரிடம்) கேட்டு உங்களுக்கு சொல்கிறேன் என அந்த நபரிடம் கூறும் மருத்துவமனை ஊழியர், 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் போன் செய்யுங்கள் என கூறி அழைப்பை துண்டிக்கிறார்.

சம்மந்தப்பட்ட நபர் 10 நிமிடம் கழித்து மீண்டும் மருத்துமனைக்கு போன் செய்தவர், 10 நிமிடத்தில் கேட்டு சொல்வதாக சொன்னீங்களே, கேட்டுட்டீங்களா என கேட்க; ஆ கேட்டாச்சு.. அதிராம்பட்டினம் ரெட் ஜோன் ஏரியால இருக்கு என ஊழியர் சொல்ல, சம்மந்தப்பட்ட நபர், அப்போ மேடம் எந்த மாவட்டத்துல இருக்காங்க ? பட்டுக்கோட்டை தஞ்சை மாவட்டம் கிடையாதா ? ஏன் மேடம் நியூஸ் பார்க்க தானே செய்றாங்க என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

உடனே ஊரடங்கை சொல்லி திசை திருப்புகிறார் அந்த மருத்துவமனை ஊழியர். ஊரடங்கால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நாங்கள்தான் முறையான அனுமதி பெற்று வர போகிறோம். பொதுவாக ஒரு டாக்டர் என்றாலே பேஷண்டை கவனிக்க கூடியவங்கதான்.. டாக்டரே பேஷன்டை பார்க்க மாட்டார்கள் என்றால் அவர்கள் யாரை தான் பார்ப்பார்கள் என கேள்விக்கனைகளை வீசுகிறார் சம்மந்தப்பட்ட நபர். உடனே போன் நம்பர் தருகிறேன், நீங்கள் மேடத்திடம் பேசுறீங்களா என ஊழியர் கேட்க, என்னிடமே நம்பர் உள்ளது நான் பேசிக்கொள்கிறேன் என அழைப்பை துண்டிக்கிறார் அந்த நபர்.

பின்னர் மகேஸ்வரி டாக்டருக்கு போன் செய்து, மேம்.. நாளை பேஷன்டை காண்பிக்கணும்.. கூட்டிக்கிட்டு வரலாமா என கேட்க உடனே மருத்துவரும் எந்த ஊர் சார் என்றே கேட்கிறார். அந்த நபர் அதிராம்பட்டினம் மேம் என்றதும், அதிராம்பட்டினம் கண்டென்மன்ட் ஏரியானு இந்த 1 மாதத்துக்கு அங்கேயே பார்க்க சொல்றாங்க சார் என்கிறார் மருத்துவர். எதனால் மேம் என இவர் கேட்க, அதான் ரெட் ஜோன் ஏரியானு சொல்லிர்காங்கள்ள.. அதுநால கொஞ்ச நாளைக்கு அங்கே பாத்துக்கோங்க னு சொல்றாங்க சார்… எத்தனை மாசம் சார் என்கிறார் மருத்துவர். ஆறு மாதம் என்றதும்; ஆறு மாதம் தானே, டேப்லெட் வாங்கிகொள்ளுங்களேன், ஸ்கேன் பாத்துட்டீங்களா என மருத்துவர் கேட்க, இல்ல மேம் அதான் உங்களிடம் ஒரு செக்அப் பண்ணிட்டு ஸ்கேன் பார்க்கலாம் என கேட்கிறோம் என கூறுகிறார் அந்த நபர்.

மீண்டும் நீங்க எந்த ஏரியா சார்.. உங்க பக்கத்துல எதுவும் கொரோனா பேஷன்ட்ஸ் இருக்காங்களா என மருத்துவர் கேட்கிறார். இல்ல மேம் இந்த பக்கமெல்லாம் கொரோனா யாருக்குமே கிடையாது மேம் என்கிறார் சம்மந்தப்பட்ட நபர். மருத்துவரோ, இல்ல அதிராம்பட்டினம் தான் மெஜாரிட்டுன்னு ஸ்டாடிஸ்டிக்ஸ் சொல்றாங்க.. அதுநால உங்க ஏரியால இருந்துச்சின்னா நீங்க வரக்கூடாது… எல்லாத்தையும் தான் பார்க்கணும்ல என்கிறார். ஸ்கேனுக்கு எழுதி தருகிறேன் எடுத்துக்கொள்ளுங்கள் என மருத்துவர் கூற, முதலில் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பிறகு தானே ஸ்கேன், டேப்லெட் எல்லாமே என்கிறார் சம்மந்தப்பட்டவர். எமர்ஜென்சியா உங்களுக்கு என மருத்துவர் கேட்க இல்ல மேம் சாதாரண செக்அப் தான் என அந்த நபர் கூற சிறிது நேரத்தில் உரையாடல் நிறைவு பெற்றது.

கொரோனா தாக்கத்திற்கு பிறகு அதிராம்பட்டினத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனைகளால் புறக்கணிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அதிரையைச் சேர்ந்த பெண்ணிற்கு தஞ்சையில் உள்ள தனியார் ரத்த வங்கி ரத்தம் தர மறுத்ததாக ஆதாரத்துடன் புகார் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு முத்துப்பேட்டையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கும் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவ நேரத்தில் இதே கொடுமை நடந்தேறியது நினைவிருக்கலாம்.

முதலில் அதிரையை குறிவைத்து பரப்பப்பட்ட கொரோனா வதந்திகள், பின்னர் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு எதிரானதாக மாற்றப்பட்டு விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அதிரை கர்ப்பிணி பெண்களை பட்டுக்கோட்டை மருத்துவமனைகள் புறக்கணிப்பு செய்வதும், அவர்களுக்கு சிகிச்சை தர மறுப்பதும் தொடர்ந்து வருவதால், இவ்விஷயத்தில் தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், புறக்கணிப்பு தொடருமாயின் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அரசு தயங்க கூடாது என்பதே அதிரை மக்களின் அவசர கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...