கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.இந்த ஊரடங்கினால் பால்,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தாண்டி வேறு கடைகள் திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவில் சில மாறுதல்களை செய்து மே 3ம் தேதி முதல் தளர்வுகளை மாநில அரசு வெளியிட்டு இந்த தளர்வுகள் அதிரைக்கு பொருந்தாது என்ற அறிவிப்பை பேரூராட்சி வெளியிட்டது.
இப்படி பல அறிவிப்புகளால் கடைகள் திறக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர் அதிரை வியாரிகள்,வாடகை,மின் கட்டணம்,மொத்த வியாபாரிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை,குடும்பத்திற்கு தேவையான செலவுகள்,ஊழியருக்கான சம்பளம் என பல இக்கட்டான சூழலில் சூழப்பட்டு அடுத்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.கடைகள் திறந்தாலும் பொருட்களின் நிலைமையை நினைத்து கவலடைகின்றனர்.
ஆதலால் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அதிரையை சார்ந்த அனைத்து வகை வியாபாரிகளுக்கும் உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும்,மின் கட்டணம் ஆகியவைகளை ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிட்டால் மட்டுமே மீண்டும் தொழிலை தொடங்கமுடியும் என்ற இக்கட்டான சூழலில் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.



Your reaction