தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூட மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டு இருந்தன. 40 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே 17 ஆம் தேதி வரை மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பச்சை மண்டலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட உடன் மதுப்பிரியர்கள் அங்கு அலைமோதினர்.
இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மதுபானக் கடைகளை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Your reaction