​வடகிழக்கு பருவமழை எதிரொலி தமிழகம் முழுவதும் 1491 ஏரிகள் நிரம்பியது

3018 0


தமிழக முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14098 ஏரிகள் உள்ளது. இதில்,1491 ஏரிகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2040 ஏரியில் 298ம், திருவள்ளூரில் 593 ஏரிகளில் 220ம், காஞ்சிபுரத்தில் 961 ஏரிகளில் 250ம், ெசன்னையில் 2 ஏரிகளில் 2ம், திருவண்ணாமலையில் 697ல் 130ம், நெல்லையில் 1327 ஏரியில் 175ம், கிருஷ்ணகிரியில் 87ல் 62ம், வேலூர் 519ல் 118ம், தஞ்சாவூரில் 642ல் 5ம், தேனியில் 135ல் 12ம், தூத்துக்குடியில் 222ல் 3ம், திருச்சியில் 174 ஏரிகளில் 7ம், திருப்பூரில் 40 ஏரிகளில் 3ம், விழுப்புரத்தில் 842 ஏரிகளில் 69ம், சேலத்தில் 107 ஏரிகளில் 12ம், நாமக்கலில் 79ல் 11ம், நாகையில் 5 ஏரியில் 2ம், திருவாரூரில் 30ல் 1ம், திண்டுக்கல்லில் 190ல் 24ம், தர்மபுரியில் 74 ஏரிகளில் 10ம், கோவையில் 27 ஏரிகளில் 2ம், அரியலூரில் 95 ஏரிகளில் 7ம், கடலூரில் 228 ஏரிகளில் 68 ஏரிகளும் நிரம்பியுள்ளது. ஆனால், ஈரோடு, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள ஒரு ஏரி கூட நிரம்பவில்லை.  இது குறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14098 ஏரிகள் உள்ளது. இதில், 1491 ஏரிகள் நிரம்பியுள்ளது. 75 சதவீதத்திற்கு மேல் 1433 ஏரிகள் நிரம்பியுள்ளது என்றார்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: