தடுமாறும் அதிரை இளைஞரே.. தடம் மாறாதே..!!

3050 0


ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது அதன் பின் ஒன்றுமே இல்லை.

அவன் இறந்த பின் மண்ணோடு மண்ணாகிறான் என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், பாவம்,புண்ணியம் என்று எதற்கும் பயப்பட தேவை இல்லை.

ஆனால்  மனிதன் இறந்த பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அது முடிவற்றது. வாலிப வயதில் ஒரு மனிதனின் பங்கு,பெரும் சோதனைக்கு உரியது. இந்த வயதில் தான் ஒரு இளைஞனின் வாழ்க்கை திசை மாறுகிறது அல்லது மாற்றப்படுகிறது.

ஒரு இளைஞன் தன் வாலிப வயதில் எவ்வாறு சக மனிதர்களுடனும்,தோழர்களுடனும் பழகுகிறானோ அவ்வாறு தான் அவனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிவிடுகிறது.

ஆடை இல்லா மனிதன் அறை மனிதன் என்பது பழமொழி. நல்ல நண்பர்களை தேடுவதை விட நீ நல்ல நண்பனாய் இரு, கட்டாயம் உனக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்று ஓர் அறிஞர் சொன்னார். ஆனால் இன்றைய இளைஞர்கள் அப்படி இல்லை.

குறிப்பாக அதிரை இளைஞர்கள் சிலர் தவறான நண்பர்களின் பழக்க வழக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டு போதை வஸ்துக்களான கஞ்சா, Bond, மது சூது உள்ளிட்டவைகளுக்கு அடிமையாகி வருகின்றனர்.

அதிலும் சில பல இளைஞர்கள் மட்டுமே தங்களை தவறான வழியில் செல்லாமலும் தவறான நண்பர்களுடன் சேராமலும் அவர்களே அவர்களை பாதுகாத்து வருகின்றனர்.

இஸ்லாத்தின் நற்குணங்களை அடைய பொய், புறம், நம்பிக்கை, மோசடி, பெருமை, தீய எண்ணம், கோபம், மது, சூது, லஞ்சம், திருட்டு போன்ற இன்னும் பலவற்றினை ஒரு முஸ்லிம் அறவே விட்டொழிக்க வேண்டும். ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் எத்தனை இளைஞர்கள் விட்டொழிக்கிறார்கள் ? 

சற்று நடு நிலையோடு சிந்தித்து பார்ப்போம்..

நமது தோல்  வலிமையில் தான் நாம் சம்பாதிக்கின்றோம் என்று எண்ணிவிடக்கூடாது. தோல் மூலம் நாம் ஒன்றும் சாதித்து விட முடியாது. கை,கால்களை இறைவனே கொடுத்தான். இதனால் தான் அவனது ஆணைப்படி உழைக்கின்றோம். ஆனால் இந்த உழைப்பு ஒன்றும் தந்து விட முடியாது. தரக்கூடியவன் அல்லாஹ் தான். எனவே நாம் நன்மையின் வழியையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் நமது அதிரை இளைஞர்கள் எத்தனை பேர் இந்த நம்பிக்கையில் இருக்கின்றோம் ?

முத்துக்கு சொந்தக்காரர்களாய் சஹாபா பெருமக்கள்.!

ஆனால் அதில் சிப்பியாய் இருக்கக்கூட தகுதியற்றவர்கள் நாம்.!

பூக்கடை மலர்களாய் அவர்கள்.!

சாக்கடை புழுக்களாய் நாம்.!

ஏனிந்த முரண்பாடுகள் ? எப்படி வந்தது ? இதை பற்றி நாம் சிந்தித்தோமா ? இதைப்படித்து விட்டு ஒரு கட்டூரையை படித்தோம் என்று எண்ணி கொண்டு தூங்கிவிடுவீர்களாயின் நெடுந்தூக்கம் தூங்கிய பின் இறைவன் எழுப்புவானே..! அப்பொழுது விழித்து இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.

ஆகவே கேள்வி கணக்கு கேட்கும் நாளை மறுமையில் சுவனம் செல்வதற்கு நாம் செய்த குற்றங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுவோம்..

அதிரை இளைஞர்களே.. நெடுந்தூக்கம் வரும் முன் விழித்துக் கொள்வோம்..

இதோ உங்களுக்கு, குறிப்பாக என்னை போன்ற வாலிப வயது இளைஞர்களுக்கு 5 கேள்விகள்;-

இந்த நிமிடம் நம் மரணம் வந்தால் மறுமையில் நம்முடைய நிலை என்ன ?

நாம் மறுமைக்காக சேர்த்து வைத்தது தான் என்ன ?

நாம் அடைந்த இந்த இஸ்லாத்தை நம் வாழ்வில் எத்தனை பேருக்கு எடுத்து சொன்னோம் ?

நம் வாழ்க்கை நபி (ஸல்) அவர்கள் சொன்னபடி அமைந்துள்ளதா ?

ஒரு நாளில் நாம் எத்தனை முறை மறுமைக்கு அஞ்சுகிறோம் ?

இந்த 5 கேள்விகளுக்கும் நாம் சரியானவரா என்று சிந்திப்போம்..!

அதிரை இளைஞர்களே..! தடுமாறும் இந்த வாலிப வயதில் தடம் மாறாதீர்கள்.!

ஆக்கம்,
S.அப்துல் வஹாப்
அதிரை எக்ஸ்பிரஸ் (பொறுப்பாசிரியர்)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: