டைம்ஸ்நவ் செய்தி சேனல் மீது கிரிமினல் வழக்கு தொடுத்தது பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா!!

3079 0


சமூகம் சார்ந்த பல தொண்டு பணிகளையும்,ஸ்கூல் சலோ என்கிற முழக்கத்துடன் பள்ளி சிறுவர்களுக்கு இலவச படிப்பு சார்ந்த உபகாரணங்களையும்,கல்வி உதவித்தொகை, மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவரும் பாப்புலர் ஃபர்ண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை கடந்த சிலமாதங்களாக டைம்ஸ் நவ் சேனல் விவாதம் என்ற பெயரில் இந்த அமைப்பிற்கு எதிராக தொடர்ந்து அவதூறான கருத்துகளையும்,தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புபடுத்தி செய்திகளை போட்டுள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மீது பாப்புலர் ஃப்ரண்ட் கிரிமினல் வழக்கு இயக்கத்துடைய நற்பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் உள்துறை அமைச்சகத்துடைய அதிகாரப்பூர்வ ரகசிய ஆவணங்கள் கிடைப்பதற்கும் அல்லது கசிவதற்கும், மேலும் அதை பொதுமக்கள் மத்தியில் ஒளிபரப்புவதற்கும் காரணமாக இருந்த டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், அதன் நிருபர்கள், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் (MHA) அதிகாரிகள் ஆகியோர் மீது புதுதில்லி பாராளுமன்ற தெருவிலுள்ள காவல் நிலையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளது.

முஸ்லிம்கள், சிறுபான்மையினர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினர்களை சக்திபடுத்துவதற்காக தேசிய அளவில் பல ஆண்டுகளாக போராடும் நவீன சமூக அமைப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இருக்கிறது; மேலும் புது தில்லி, காலிந்தி குஞ்சிலுள்ள தலைமையகத்தை மையமாக வைத்து இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறையில் இயக்கம் செயல்பட்டு வருகிறது என்று பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தில்லி மாநில தலைவர் முஹம்மது பர்வேஸ் அஹமது அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: