நோன்பு கஞ்சி அரிசி குறித்து பேசிய கிருஷ்ணசாமியின் சில்லரைத்தனம் ~ முன்னாள் எம்பி அப்துர் ரஹ்மான் காட்டம்…!

2071 0


புனித ரமலான் மாதத்தில் நோன்பிருப்பவர்களுக்கென கஞ்சி தயார் செய்ய தமிழக அரசு வழங்கும் அரிசி, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறவே என்றும் அதை தமிழக அரசு வழங்கக் கூடாது என்றும் கருத்து வெளியிட்டுள்ளீர்கள். இதன் மூலம் உங்கள் உள்ளத்தின் கோர முகம் வெளிப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்காக உரிமைகளைப் பெறுவதாகச் சொல்லி அம்மக்களை நம்ப வைத்து, நீங்கள் தொடங்கிய உங்கள் கட்சியின் மூலம் எப்படியாவது எம்பியாக வந்து விடலாம் என்று கனவு கண்டு அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி அமைத்துக்கொண்டு போட்டியிட்டு அனைத்திலும் தோற்றுப்போனீர்கள். உங்கள் நோக்கம் தூய்மையானது அல்ல என்பதை உங்களை நம்பிய தாழ்த்தப்பட்ட சமூகம் நன்றாகவே தெரிந்து கொண்டது. அதனால்தான் உங்களை நம்பி ஏமாற்ந்து போன அந்த சமூக மக்கள் அந்த தேர்தல்களில் உங்களை ஏமாற வைத்தனர். மாறாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு என உருவான ஓர் அரசியல் கட்சியின் தலைவனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மனதார ஆர்வம் கொண்டு நீங்கள் போட்டியிட்ட தென்காசி தொகுதியில் முழுமையாக ஆதரவளித்தது இஸ்லாமிய சமூக மக்கள். உங்களுக்கு கிடைத்த வாக்குகள் முஸ்லிம்களின் வாக்குகள்தான். இதை அறியாதவரல்ல நீங்கள். மறந்துவிட வேண்டாம்.

இப்போது இந்த இரண்டு கட்சிகளையும் விட்டுவிட்டு பாசிச பாஜக வுக்கு லாவணி பாடும் உங்கள் நிலைப்பாட்டில் முழுக்க முழுக்க சுயநலமே தலைதூக்கி உள்ளது என்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றனர். எனவே சமூக நீதி பேசிக்கொண்டு இனிமேலும் உங்கள் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுங்கள்.

பகல் முழுதும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் முழுமையான பட்டினி நோன்பிருக்கும் முஸ்லிம்களுக்கு கஞ்சி குடித்து நோன்பு திறக்க குருணை அரிசி வழங்கிடும் தமிழக அரசின் வழக்கமான திட்டத்தை நிறுத்திட அதிமுக ஆதரவுடன் எம்பி தேர்தலில் போட்டியிட்டபோது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கேட்டீர்களா? பிறகு திமுக ஆதரவுடன் நின்றபோது கலைஞரிடம் கேட்டீர்களா? இப்போது பாசிச பாஜகவை குளிரவைத்து சுகம் காணத்துடிக்கும் உங்களின் சுயநல நோக்கத்தை கைவிட்டு தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு குரல் கொடுக்க இனியாவது முயற்சி செய்யுங்கள். நீங்கள் மனிதராக மதிக்கப்படலாம்.

உங்களைப் போலவே, நோன்புக் கஞ்சிக்கான அரிசி கொடுப்பதை தடை செய்ய வேண்டும் என இந்து முன்னணி எனச் சொல்லி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை அப்படியே தள்ளுபடி செய்து ‘கொடுக்கலாம் ‘ என நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதைப் பார்த்தாவது திருந்துங்கள்.

சில்லரைத்தனமான உங்களின் இதுபோன்ற அழுக்கு நிறைந்த கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியவை என்று முன்னாளர பாராளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் கூறியுள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: