பண மதிப்பு இழப்பு வேதனையை சாதனையாக  திசை திருப்பும் BJP அரசாங்கம்!!

2744 0


ஆளுமை செய்யும் அரசாங்கம் புதுமையான ஒரு சட்டத்தை நாட்டில் அதிரடியாக  நடைமுறை படுத்தினால் அந்த சட்டத்தால் அனுபவித்து வரும் அனுபவங்கள்  நன்மையாக உள்ளதா அல்லது  தீமையாக உள்ளதா  என்பதைஅந்த நாட்டில் வாழும் குடிமக்கள் தான் சொல்ல வேண்டும்.

குடிமக்களே அந்த சட்டத்தால் இன்னல் பட்ட பல நிலைகளை தழுவி இருக்கும் போது அந்த சட்டத்தை கொண்டு வந்தவர்கள் அதை பெருமையோடும் பேசுவது முட்டாள்தனமாகும்

குறிப்பாக அந்த சட்டத்தை கொண்டு வந்த நாளை ஏதோ திருநாள் போல் நினைத்து விழா எடுப்பது அயோக்கியதனமாகும்

மத்தியில் ஆளும் பீஜேபி அரசாங்கம் தற்போது பண மதிப்பு இழப்பை கொண்டு வந்த நாளை கொண்டாடுவது இந்த வகையை சார்ந்ததாகும்

கடந்த 2016 நவம்பர் முதல் 2017 வரை நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சீர் குலைந்து போனதற்க்கு மூல காரணமே பண மதிப்பு இழப்பு சட்டமே என்று ரிசர்வ் வங்கியே தெளிவான  அறிவிப்பு தந்த பிறகு அதை நினைத்து வெட்கி தலை குனிய வேண்டிய பீஜேபி அரசாங்கம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டிய பீஜேபி அரசாங்கம் அதை மூடி மறைத்து அந்த சட்டம் கொண்டு வந்த நாளையே  கொண்டாடுவது நாட்டு மக்களை இன்னும் கூமுட்டைகளாக கருதும் மனப் போக்காகும்

புதிதாக கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு சட்டத்தால் இது வரை பிடிபட்ட கருப்பு பணம் எத்தனை கோடிகள் என்று இது வரை முறையான அறிவிப்பை நாட்டு மக்களுக்கு பீஜேபி அரசாங்கம் தராதது ஏன் ?

இது வரை பிடிபட்ட கருப்பு பணங்களை எந்த வகையில் நாட்டு மக்களுக்காக செலவு செய்தார்கள் என்பதை அல்லது எந்த வழியில் செலவு செய்ய போகிறார்களௌ என்பதை நாட்டு மக்களுக்கு முறையாக ஒரு வருடம் நிறைவடைந்த பிறகும் கூட  பீஜேபி அரசாங்கம் அறிவிக்காதது ஏன்  ?

பிடிபட்ட கருப்பு பணங்களை வைத்திருந்திருந்த கோடீஸ்வர  குற்றவாளிகள் யார் யார் என்பதை பட்டியல் போட்டு ஊடகங்களுக்கு அறிக்கை தர பீஜேபி அரசாங்கம் தயாரா ?

கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருந்த குற்றவாளிகளுக்கு வழங்கிய தண்டனை என்ன ? அல்லது வழங்க இருக்கும் தண்டனை என்ன என்பதை பீஜேபி அரசாங்கம் இன்னும் மூடி மறைத்து வைத்திருப்பது ஏன் என்பதற்க்கு பொருத்தமான காரணத்தை பீஜேபி அரசாங்கம் மேடை போட்டு சொல்ல தயாரா ?

பீஜேபி அரசாங்கம் பினாத்தியது போல் இந்த சட்டத்தை  அமுல் படுத்திய பின் தீவிரவாதிகளின் பொருளியல்  வாசல்கள் முற்றிலும்  அடைக்கப்பட்டதா  ? அல்லது அதன் பின்பும் வழக்கம் போல் தீவிரவாதம் நடை பெற்றே வருகிறதா என்று பீஜேபி அரசாங்கம் அறிக்கை தராதது ஏன்   ?

நோட்டை மாற்றினால் நாம் வாழும்  நாட்டையே மாற்றி விடலாம் என்று அறிவிலிகளை போல் புத்தி பேதலித்து சட்டம் கொண்டு வந்து அதன் விளைவால் கடுகளவும் பயன் ஏற்படவில்லை என்பதை அறிந்து திருதிருவென விழித்து கொண்டிருக்கும் உலகின் ஒரே ஒப்பற்ற  கட்சி பீஜேபி கட்சி என்பதை இன்று பாமரனும் புரிந்து கொண்டான்  அவ்வாறு புரியாதவன் அவர்களை விட பகுத்தறிவில் குறைந்தவனாகவே இருப்பான்

 

கடந்த ஒரு வருடத்தில் பண மதிப்பு இழப்பு சட்டத்தால் பதினைந்து இலட்சம் நபர்கள் வேலை வாய்ப்பை இழந்தது தான் பீஜேபி அரசாங்கத்தின் துள்ளியமான ஹிமாலய சாதனை

 

இருநூறுக்கு மேற்பட்டோர் இந்த சட்டத்தால் தூக்கில் தொங்கியும் இரண்டு ஆயிரம் ரூபாய்காக  வங்கி வாசல்களில் வெயில் நேரங்களில்  பிச்சைகாரர்கள் போல் காத்திருந்து நெரிசலில்  நெருங்கி இறந்தது தான் பீஜேபி அரசாங்கத்தின் ஹிமாலய சாதனை

இந்த சட்டத்தால் பல கன்னியர்களின் திருமணங்கள் தடைபட வைத்தது தான் பீஜேபியின்  ஹிமாலய சாதனை

சுருங்க சொன்னால் பீஜேபி அரசாங்கம் கடந்த வருடம் கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு சட்டம் நாட்டு மக்களுக்கு வேதனையை மாத்திரம் தான் சங்கிலி தொடராக பெற்று தந்து விட்டது

ஆனால் அந்த வேதனையை மூடி மறைத்து  சாதனையாக பேசும் அளவிற்க்கு பீஜேபி அரசாங்கம் பொய் பேசுவதில்  அபரிதமான வெற்றி வாகை சூடி விட்டது.

J.யாசீன் இம்தாதி,இமாம்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: