கொரானா ஊரடங்கால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை யாரும் வெளியில் செல்லாமல், வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
இதன் காரணமாக காத்தாடி எனும் பட்டம் விடுதலில் பெரும்பாலான நேரத்தை இளைஞர்கள் கழித்து வருகின்றனர்.
இதனால் அதிரை வானில் வட்டமடிக்க தொடங்கியது காத்தாடி பட்டம்.
இந்த பட்டம் விடுதலில் சிறார்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றனர்? என்பதை பெற்றோர்கள் கவனிக்க தவறியதன் விளைவு உயிரை குடிக்கும் அளவிற்கு சில நேரங்களில் விபத்து நேரிடுகிறது.
அதோடு மாஞ்சா எனும் கொலைகார கயிறை அதிரை இளைஞர்கள் பயன்படுத்துவதாக தெரிகிறது, இதனை அரசு தடை செய்துள்ளன மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
சில நேரங்களில் குழந்தைகளுக்கு காட்டும் அன்பை விட கண்டிப்புதான் இது போன்ற துற் செயலை தடுக்கும் என்பதை நினைவில் கொள்ளக.
ஆகவே காத்தாடி விட்டு நேரத்தை கழிக்கும் இளைஞர்கள் சிறார்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதன் நோக்கமே இப்பதிவு.
Your reaction