Friday, March 29, 2024

கந்துவட்டிகொடுமையால்மற்றொருமரணம்

Share post:

Date:

- Advertisement -

SPயைசந்தித்தார்மஜக பொருளாளர்..!!

திண்டுக்கல்.நவ.04., திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த
முகம்மது ரபீக் அவர்களின் மனைவி தில்ஷாத் பேகம் என்பவர் மகளிர் சுய உதவி குழுவுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இந்நிலையில் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பல நபர்களிடமிருந்து கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

கொடுக்கல் வாங்கல் அதிகரித்த நிலையில் கடன் வாங்கிய நபர்களிடமிருந்து வட்டியின் காரணமாக நெருக்கடி அதிகரித்திருக்கிறது. மன உளைச்சல் காரணமாக நேற்று 02/11/2017 காலை 11மணியளவில் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர்.

பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் தற்கொலை செய்ய காரணமாக இருந்தவர்ளை கைது செய்தால்தான் தில்ஷாத் பேகத்தின் உடலை வாங்குவோம் என்று உறவினர்களும், பொது மக்களும் தர்ணாவில் ஈடுப்பட்டுனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.

பிரச்சனையை திசை திருப்ப சில காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதை மாநில பெருளாளர் அவர்களிடம் தெரியப்படுத்தபட்டது இந்த விஷயம் பொதுமக்களிடையே பரவ மருத்துவமனையில் பதற்றம் அதிகமானது.

இந்நிலையில் தகவல் அறிந்து திண்டுக்கல்வந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் தில்ஷாத் பேகத்தின் உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை விசாரித்து விட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களை சந்தித்து நடந்த சம்பவத்தை விளக்கமாக கூறினர்.

பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி செய்ததாகவும் புகார் கூறி, முறையாக விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்தார். அதை கேட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இதற்காக தனி குழு ஒன்றை அமைத்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

காவல் கண்காணிப்பாளர் அளித்த வாக்குறுதியை அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் கூறி மருத்துவ மனையிலிருந்து உடலை பெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறந்தவரின் 11 வயது மகனும், 9 வயது மகனும் மருத்துவ மனையில் அழுது கொண்டிருந்தது காண்போரை கண் கலங்க செய்தது. அவர்களை அழைத்து அரவணைத்து ஆறுதல் கூறினார் மஜக பொருளாளர்.

இதில் மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹபிபுல்லா, உமர் அலி,
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர்
அனஸ் முஸ்தபா, இளையான்குடி நகர துணைச் செயலாளர் சிராஜ், மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...