Friday, April 19, 2024

கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய எதிர்த்தால் 3 ஆண்டுகள் சிறை – அவசரச் சட்டம் இயற்றிய தமிழக அரசு !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா உள்ளிட்ட தொற்று நோயால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வதை எதிர்த்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசினால், அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் ( Notified Disease) உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும் தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த அவசரச் சட்டத்தின்படி அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் ( Notified Disease) உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதைத் தடுப்பதும் தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 பிரிவு -74ன் படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...