பொழியும் மழைநீர் இயற்கை பேரழிவா?அல்லது அரசியல்வாதிகளின் பகுத்தறிவு பேரழிவா?!!!!

2895 0


மனிதனின் தேவைகளுக்கு மனிதனே உருவாக்கி கொள்ளும் பொருள்களும் உலகில்  உண்டு

அதே நேரம் அனைத்து ஜீவராசிகளின்  அடிப்படை தேவைகள் அனைத்தையும்  இறைவனே நேரடியாக வழங்குகிறான் அதில் ஒரு பாக்கியமே மழை.

நீர் இன்றி உலகமையாது என்ற பொன்மொழியை தான் மனிதன் உருவாக்க இயலும்.

அதே நேரம் அந்த நீரில் ஒரே ஒரு ஜீவனுக்கு தேவையான குடிநீரை மட்டும் உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் இயற்கை போன்று உருவாக்க இயலுமா என்றால் நிச்சயம் முடியாது.

விற்பனையாளர் நுகர்வோரின் வீட்டுக்கு தேவையான பால் பாக்கெட்டுகளை தனி தனியாக வீடு தேடி சென்று  போடுவதை போல ஒவ்வொரு  வீட்டுக்கும் தேவையான குடிநீரை இறைவன் எவருக்கும் தனிதனியாக வானில் இருந்து பொழிய வைப்பது இல்லை.

இறைவன் மழைநீரை ஒட்டு மொத்தமாக பொழிய வைக்கும் நாம் தான் அதை சேமித்தும் பாதுகாத்தும் வைக்க வேண்டும்.

குறிப்பாக அரசாங்கம் தான்  அதற்கான முன் ஏற்பாடுகளை  முற்கூட்டியே செய்து வைக்க வேண்டும்.

அனைகளை உருவாக்குவதும் குளம் ஆறு  ஏரிகளை தூர் வாருவதும் வழியும் மழை நீரை பாதுகாப்பாக அதற்க்குரிய இடங்களில் சேமிக்கும் வழிமுறைகளில் கவனம் .செலுத்துவதும் தான் அரசாங்கத்தின் முக்கிய கடமை

பொழியும் மழை நீர் ஒதுங்கும் இடம் இல்லாத காரணத்தால் தான் மழை காலங்களில் நடைபாதைகளிலும் வாழும் இடங்களிலும் மழை நீர் பல விதமான பாதிப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது.

இது போன்ற சூழலில் இயற்கை பேரழிவு என்று இதற்க்கு பெயர் வைத்து கொண்டு நாட்டு மக்களை  அரசியல்வாதிகள் ஒட்டு மொத்தமாக ஏமாற்றுகிறார்களே தவிர இதற்க்கு மூல காரணமாக இருக்கும்  அரசாங்கத்தின் தவறுகளை மூடி மறைக்கின்றனர்.

இந்திய நாடு சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுக்கு மேல் கழிந்தும் இது வரை நம் நாட்டை ஆண்ட அரசியல்வாதிகள் நம் நாட்டில் கட்டிய அனைகள் ஏரிகள் குளங்கள் நீர் தேக்க தொட்டிகள் எத்தனை ?

தற்போது இருக்கும் அனைகள் மற்றும் நீர்நிலைகள் கூட நம் நாட்டை கைவசம் வைத்திருந்த  வெள்ளையர்களும் முகலாய மன்னர்களும் கட்டியவைகள் தான்.

ஒரு வகையில் தற்போதைய ஆட்சியாளர்களை விட தகுதியான ஆட்சியாளர்களே முகலாய மன்னர்களும் வெள்ளையர்களும் தான்.

மழைநீர் தங்கும் ஏரிகள் குளங்களை கூட முற்றிலும் மூடி விட்டு அதை கூட வணிகம் செய்யும் இடங்களாகவும் குடியிருப்பு பகுதிகளாகவும் திருட்டுதனமாக தாரைவார்த்த திருடர்களே நம் அரசியல்வாதிகள்.

வரிக்கு மேல் வரிபாரத்தை கூட்டி மக்களிடம் கொள்ளை அடித்து கோடி கோடியாக சேமித்து வைத்துள்ள  அரசாங்க பணத்தில் கூட செத்துப்போன அரசியல்வாதிகளுக்கு சமாதி எழுப்புவதற்க்கும் அதன் மீது மக்களுக்கு பயன்தராத வீணாண மணிமண்டபங்களை கட்டுவதற்க்கும் வெட்டி செலவு செய்கிறார்களே  தவிர அதை கூட குடிமக்களுக்கு உபயோகமான நீர்நிலைகளை எற்படுத்த பயன்படுத்துவது இல்லை.

குடிக்கும் நீரை கூட காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு மழை நீரை நாசமாக்கிவிட்ட பகுத்தறிவை பயன் படுத்தாத  நபர்களே நம் நாட்டு  அரசியல்வாதிகள்.

சுருக்கமாக சொன்னால் மழைநீரால் அடிக்கடி ஏற்படும் அழிவுகள்

    !! இயற்கை பேரழிவு அல்ல !!

மாறாக அது நம் நாட்டை ஆளும் சிந்தனை இல்லாத மக்கள் நலனில் கவனம் செலுத்தாத மூடர்களான  அரசியல்வாதிகளின்

       !! பகுத்தறிவு பேரழிவே !!

وَهُوَ الَّذِىْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ ‌ حَتّٰۤى اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ‌ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ 

அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன் நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்

அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்

பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம்

இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம்

(எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக
(அல்குர்ஆன் : 7:57)

J . யாஸீன் இம்தாதி — இமாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல்  வேர்கிளம்பி  குமரிமாவட்டம்

கட்டுரை தொடர்பான ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள்  தகவல் தொடர்புக்கு — 9994533265

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: