தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங் கியதாலும், வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை நகரில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக் கும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம், திருவள்ளூர், நாகை, விழுப் புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும், தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என்றும் உயர் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்து உள்ளார்.
இதனிடையே புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இந்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Your reaction