அதிரையில் அரசியல் காரணங்களுக்காக புதைக்கப்பட்ட 110KV திட்டம் உயிர் பெறுமா?
அதிராம்பட்டினத்தில் தற்போது 33KV துனை மின் நிலையம் இயங்கி வருகிறது.
இதற்கான இடம் அதிராம்பட்டினம் நகர பொதுமக்களால் வழங்கப்பட்ட இடமாகும்.
இந்நிலையில் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகையால் இந்த 33KV துணை மின் நிலையத்தால் சரிவர மின் விநியோகம் செய்ய இயலவில்லை.
இதனை கருத்திற்கொண்ட தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டபேரவையில் 110வது விதியின் கீழ் அதிராம்பட்டினத்திற்கு 110கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கப்படும் என கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் தஞ்சை மின் துறை இயக்குனர் இதற்கான ஆயத்தபணிகளில் மும்முரமாக இறங்கவே விரைவில் அதிரைக்கு உயரழுத்த மின்சாரம் கிடைக்கும் என நம்பிக்கையில் காத்திருந்தனர்.
ஆனால் அதிரையில் சில அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் பாதிக்கப்பட்டு வருடகணக்கில் ஆகி விட்டது என விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தஞ்சையில் இருந்து அதிரைக்கு வந்த மின்சாரத்துறை அதிகாரிகள் நேராக குறிப்பிட்ட ஒரு கட்சியின் அலுவகத்திற்கு சென்று, நிலம் தொடர்பாக விசாரித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு கட்சியினர் இத்திட்டத்தை காத்திருக்கும் வேலையை செய்து விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டால் தடுமாறி கொண்டுள்ள அதிரையர்களுக்கு ஒத்தடம் போடும் தமிழக அரசு ?
Your reaction