கொரோனா பரிதாபங்கள்! நாளைய வெற்றி அதிரைக்கே!!

2030 0


வாஸ்ட்அப்பில் வந்த வீடியோவை பார்த்ததும் கையை மீறி ஏதோ நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. இங்கு குறிவைக்கப்பட்டது அதிரையர்களா? அல்லது குறிப்பிட்ட மதத்தினரா?. இதற்கு எல்லாம் யார் காரணம் ? அவர்களின் திட்டம் தான் என்ன? நம் எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும் என யார் தீர்மானிக்கிறார்கள்? போன்ற கேள்விகள் அனைத்தும் மனதில் எழுந்தது.

உலக அரங்கில் பொருளாதாரம் எப்படி கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என வகுக்கப்பட இருக்கிறதோ, அதேபோல் அதிரையின் நிகழ்வுகளும் கொ.மு., கொ.பி., என நிச்சயம் பிரிக்கப்படும்.

தற்போது நிகழும் நிகழ்வுகள் கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் பிரதிபலிக்கும் என்பதால் கிராமபுரத்தினர் உட்பட அனைவரும் உணர்ச்சிவசத்திற்கு இடம் கொடுக்காமல் முறையான அணுகுமுறையை கையாள வேண்டும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் சில கொரோனா பரிதாபங்கள், அரசு அனுமதி பெற்ற வாகனங்களை மறிப்பதும், மருத்துவரின் உடலுக்கான இறுதி சடங்கை செய்யவிடாமல் தடுப்பதும் சோ கால்டு நவநாகரீக யுகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை காட்டுகிறது.

தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் அதிரை தொடர்பான அந்த வீடியோவை பார்க்கும் பலருக்கும் மனம் வேதனை அடைவது உண்மை தான். ஆனால் நிச்சயம் நாளைய வெற்றி நமதே.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: