கருத்துகளால் மோத முடியமால் நடிகர் விஜயை மத ரீதியாக பா.ஜ.க பேசுவது கண்டிக்கதக்கது – மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிர்ருல்லா

2773 0


 

கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழம் மற்றம் மனித நேயமக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிர்ருல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில் வரும் டிசம்பர் 6ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தினை பயங்கரவாத தினமாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழம் மற்றம் மனித நேயமக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில் திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், திராவிடர் கழகம், மே 18 உள்பட பல்வேறு இயக்கங்களும் பங்கேற்கவுள்ளதாகவும், மத்திய பா.ஜ.க அரசு மற்றும் உத்திரபிரதேச பா.ஜ.க அரசு இணைந்து அயோத்தில் பெரிய கோவில் அமைக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும், தாஜ்மஹாலை அவமானத்தின் சின்னம் என்று பா.ஜ.க கூறுவது கண்டிதக்கது. இந்தியாவில் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் சுற்றுலா மூலமாக 100 கோடி ரூபாய் சுற்றுலாத்துறைக்கு வருவாய் வருகிறது. இதில் 65 சதவீதம் மெகலாயமன்னர்கள் கட்டிய கட்டிடங்கள் மூலம் வருகிறது. மெகலாய மன்னர்கள் ஆட்சிகாலத்தில் இந்தியா செல்வமிக்க நாடாக இருந்தது, மோடி ஆட்சி காலத்தில் வீழ்ச்சி அடைந்தநாடாக உள்ளது. உலகளவில் பசி நிறைந்த மக்கள் வாழும் நாடாக இந்தியா உள்ளது. உண்மைகளை ஏற்க மோடி அரசு மறுக்கிறது.இன்றைக்கு ஜீ.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா குறித்து மெர்சல் திரைப்படத்தில் செல்லபட்டதை கருத்துக்களால் மோத முடியமால் நடிகர் விஜயை மதரீதியாக சித்திரித்து விமர்சனம் செய்து வருவது கண்டிதக்கது, அனைவருக்கும் இலவச மருத்துவம் கொடுக்க வேண்டும், கார்பரேட் கையில் மருத்துவம் செல்லக்கூடாது என்று வலியுறுத்தும் கருத்துக்களை மெர்சல் படித்தில் கூறினால் தேசத்தூரோகமா?, எடப்பாடி தலைமையிலான அரசு மோடியின் கொத்தடிமையாக உள்ளது. ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை மோடியன் ஆலோசனையுடன் தமிழகத்தில் நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு, அதன் வெளிப்படாக ராஜேந்திபாலாஜி கூறி கருத்துகள் ஆச்சரியம் ஒன்றும் இல்லை, நிதியோக் விவசாயத்தினை மத்திய பட்டியலுக்கு கொண்டு வர ஆலோசனை கூறியுள்ளது. ஏற்கனவே கல்வி மத்திய பட்டியலுக்கு சென்றுவிட்டது தற்போது விவசாயத்தினையும் மத்திய பட்டியலுக்கு சென்றால் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும், விவசாயிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் என்றார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: